Mars Venus and Saturn Conjunction: சுக்கிரன், செவ்வாய், சனி சேர்க்கை கும்ப ராசியில் ஏற்படும். இந்த அபூர்வ நிகழ்வு சில ராசிகளை பாதிக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
75 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சுக்கிரன், சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை உருவாகிப் போகிறது. இந்த சேர்க்கை 12 ராசிகளையும் பாதிக்கும். ஆனால் சில ராசிகளுக்கு மட்டும் சுக்கிரன், சனி மற்றும் செவ்வாயின் அருள் பெற்று பண மழை பொழியசி செய்யும். இதன் காரணமாக, இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும்.
மேஷம்: சுக்கிரன், செவ்வாய் சனியின் சேர்க்கை மேஷ ராசியினருக்கு சாதகமான பலனைத் தரும். வருமான ஆதாரங்கள் புதிதாக உருவாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் மேஷ ராசியினருக்கு லாபம் உண்டாகும். மூதாதையர் சொத்துக்களால் நிதி ஆதாயம் ஏற்படும்.
ரிஷபம்: சுக்கிரன், செவ்வாய் சனியின் சேர்க்கை ரிஷப ராசியினருக்கு சுப பலனைத் தரும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். மேலும், பொருளாதார நிலை சாதகமாக இருக்கும்.
மிதுனம்: மிதுன ராசிக்கு இந்த மூன்று கிரங்களின் சேர்க்கை சாதகமாக இருக்கும். தொழிலில் திடீர் பண லாபத்தை அடைவீர்கள். தொழில் செய்யும் மிதுன ராசியினர் சில நல்ல சாதகமான செய்திகளைப் பெறலாம். மாணவர்கள் தங்களின் படிப்பில் மிகுந்த ஆர்வத்தை காட்டுவார்கள்.
துலாம்: மூன்று கிரகங்களின் சேர்க்கை துலாம் ராசியினருக்கு சாதகமான பலனைத் தரும். சிறப்பான பலனையும் தரும். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தியை பெறுவார்கள். திருமணம் வாழக்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
தனுசு: செவ்வாய், சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கை தனுசு ராசிக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் இருக்கும் தனுசு ராசியினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணத்தை முதலீடு செய்ய இதுவே சரியான நேரமாகும். வாழ்க்கை துணைவியுடன் அற்புதமான நேரத்தை செலவிடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் நல்ல வளர்ச்சி அடைந்து நிதி நிலை மேம்படும்.
கும்பம்: 75 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் இந்த சேர்க்கை கும்ப ராசிக்கு பதிவு உயர்வையும், அலுவலகத்தில் கௌரவத்தையும் தரப் போகிறது. சொந்த தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் கும்ப ராசிக்காரர்கள் பொருளாதார வளர்ச்சியை காண்பார்கள். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.