10 ஆண்டுக்கு பிறகு திரிகிரஹி யோகம் உருவாகிறது, 3 ராசிகளுக்கு பொற்காலம்
Tirgrahi Yog in Pisces 2024: வேத ஜோதிடத்தின்படி, தற்போது மீன ராசியில் அபூர்வமான திரிகிரஹி யோகம் உருவாகப் போகிறது. இதன் காரணமாக மூன்று ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்க போகுது.
மீனத்தில் உருவாகும் திரிகிரஹி யோகம்: வேத ஜோதிடத்தின்படி, கிரகங்கள் தங்களின் ராசியில் மற்றும் நட்சத்திரத்தை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த மாற்றங்கள் மனித வாழ்க்கையிலும், நாடு மற்றும் உலகிலும் தெரியக்கூடும். அந்த வகையில் தற்போது சில கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரஹி மற்றும் சதுர்கிரஹி யோகங்கள் உருவாக்கப் போகிறது. இந்த யோகங்கள் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான மற்றும் பாதகமான விளைவை ஏற்படுத்தும். இதில் முதலில் திரிகிரஹி யோகமானது மார்ச் மாதம் உருவாகப் போகிறது. இந்த திரிகிரஹி யோகமானது சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கையால் இந்த யோகம் உருவாககூடும். இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும். அந்த ராசிகள் எவை என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்...
ரிஷபம் (Taurus Zodiac Sign): சூரியன், புதன், சுக்கிரன் கிரகத்தால் உருவாகப் போகும் திரிகிரஹி யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். ஏனெனில் இந்த திரிகிரஹி யோகமானது ரிஷப ராசியிலிருந்து வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தில் அமைய உள்ளது. எனவே, இந்த நேரத்தில் ரிஷப ராசிக்காரர்கள் தங்களின் வருமானத்தில் மிகப்பெரிய உயர்வை காணலாம். அதுமட்டுமின்றி முதலீட்டின் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டலாம். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்றவற்றை தொழில் செய்யும் ரிஷப ராசிக்காரர்கள், நல்ல லாபத்தை பெறுவார்கள். உத்தியோகத்தில் இருக்கும் ரிஷப ராசிக்காரர்கள் சக ஊழியர்களிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள். பங்குச்சந்தை, பந்தயம், லாட்டரி போன்றவற்றில் அதீத லாபத்தை பெறுவீர்கள்.
மேலும் படிக்க | இப்படி கஷ்டத்தை அனுபவிச்சதேயில்ல! சனியுடன் இணையும் செவ்வாயின் தாக்கம்!|
மிதுனம் (Gemini Zodiac Sign): சூரியன், புதன், சுக்கிரன் கிரகத்தால் உருவாகப் போகும் திரிகிரஹி யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். ஏனெனில் இந்த திரிகிரஹி யோகம் மிதுன ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தின் கர்ம வீட்டில் நடக்கப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் மிதுன ராசிக்காரர்கள் தங்களின் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அதேசமயம் உத்தியோகத்தில் இருக்கும் மிதுன ராசிக்காரர்கள் தங்களின் அலுவலகத்தில் நல்லுறவைக் கொண்டிருப்பார்கள், பதவி உயர்வு கிடைக்கக்கூடும். மேலும், தொழிலதிபராக இருக்கும் மிதுன ராசிக்காரர்கள் நான்கு மடங்கு லாபத்தை பெறுவார்கள். இதநாள் வங்கி இருப்பில் கிடுகிடு அதிகரிப்பு காண்பீர்கள். அதே நேரத்தில், வேலையில்லாதவர்கள் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். தந்தையுடனான உறவு வலுவடையும்.
கும்பம் (Aquarius Zodiac Sign): சூரியன், புதன், சுக்கிரன் கிரகத்தால் உருவாகப் போகும் திரிகிரஹி யோகதால் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். ஏனெனில் இந்த யோகம் கும்ப ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தின் பணவீட்டில் அமையப்போகிறது. எனவே, எதிர்பாராத பணத்தை கும்ப ராசிக்காரர்கள் பெறலாம். மேலும் நிதி நிலை சிறப்பாக இருக்கும். சிக்கி இருந்து பணத்தை மீண்டும் பெறலாம். மேலும், தொழிலதிபராக இருக்கும் கும்ப ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியை பெறலாம். நிதி ரீதியாகவும் வளமாக இருக்கும் வாய்ப்பை பெறுவீர்கல். விருப்பங்கள் அனைத்து ஒன்றின் பின் ஒன்றாக நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | 30 ஆண்டுக்கு பின் சனி உச்சம்.. இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ பொற்காலம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ