200 ஆண்டுக்கு பின் உருவாகும் அபூர்வ யோகங்கள்.. 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை
Three Rajyog In Transit Kundli: வேத ஜோதிடத்தின்படி, அடுத்த மாதம் அதாவது மார்ச் மாதம் 200 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் மூன்று அபூர்வமான ராஜயோகங்கள் உருவாகப் போகிறது, இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
பொதுவாக வேத ஜோதிடத்தின்படி, அனைத்து கிரகங்களும் தங்களின் ராசியை மாற்றிக் கொண்டே தான் இருக்கும், இந்த ராசி மாற்றத்தால் சுப பலன்களும், அபூர்வ ராஜயோகங்களும் உருவாக்கும். இந்த நிகழ்வால் மக்களின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஜோதிட கணக்கீடு. அந்த வகையில் அடுத்த மாதம் அதாவது வரும் மார்ச் மாதம் 200 ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வமான மூன்று ராஜயோகங்கள் உருவாகப் போகிறது. இதில் முதல் ராஜயோகம் சனி கும்ப ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளதால் ஷஷ மகாபுருஷ ராஜயோகத்தை உருவாக்கும். அதே சமயம் செவ்வாய் மகர ராசியில் நுழைந்து பெயர்ச்சி அடைவதால் ருச்சக ராஜயோகத்தை உருவாகும். மேலும், மார்ச் மாதத்தில் சுக்கிரன் தனது உயர்ந்த ராசியான மீன ராசியில் பெயர்ச்சி அடையப் போவதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகும். இந்த ராஜயோகங்கள் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசித்தது சுப பலன்களை தரும். அதுமட்டுமின்றி இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயத்தை பெறுவார்கள். எனவே தற்போது இந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்...
ரிஷபம் (Taurus Zodiac Sign): இந்த மூன்று ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக பலன் கிடைக்கும். அலுவலக வேலை மற்றும் வியாபாரம் செய்யும் ரிஷப ராசிக்காரர்களுக்கு தங்களின் வேலையிலும், வியாபாரத்திலும் முன்னேற்றத்தை அடைவார்கள். மற்றவர்களிடமிருந்து மரியாதை மற்றும் கௌரவத்தை பெறுவீர்கள். மேலும், இந்த மூன்று சுப ராஜயோகத்தால், வியாபாரம் நன்றாக செயல்படும், இதனால் பொருளாதார ரீதியாகவும் செழிப்புடன் இருப்பீர்கள். தொழில் செய்பவர்கள் பொன்னான வாய்ப்புகளைப் பெறுவார்கள், நண்பர்களுடன் நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்வீர்கள். செல்வ வளர்ச்சியில் எந்த குறையும் இருக்காது. வங்கி இருப்பும் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகளை பெறுவீர்கள்.
மேலும் படிக்க | மகரத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, பண வரவு
மிதுனம் (Gemini Zodiac Sign): இந்த மூன்று ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். கடின உழைப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றத்தை அடைவீர்கள், மேலும் பல பொன்னான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வெளிநாடு பயணத்தை மேற்கொள்ளலாம். வணிகர்கள் நல்ல லாபத்தை பெறலாம். மாணவர்களுக்கு இந்த யோகங்கள் சாதகமான பலனைத் தரும். போட்டித் தேர்விகளில் எளிதாக வெற்றி பெறுவீர்கள்.
மகரம் (Capricorn Zodiac Sign): இந்த மூன்று ராஜயோகம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறுவதுடன் ஆளுமையும் மேம்படும். நிதி நிலை வலுவாக இருக்கும், கடன் தொல்லை நீங்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். சொத்துக்களை வாங்கலாம். சமூகத்தில் நற்பெயரும், செல்வமும், கௌரவமும் அதிகரிக்கும். அலுவலகத்தில் ப்ரமோஷன், சம்பள உயர்வு போன்றவற்றை பெறலாம். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயத்தைத் தரும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ