மகரத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, பண வரவு

Mars Transit: செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் சுப யோகங்களின் தாக்கம் 12 ராசிகளிலும் எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 6, 2024, 02:16 PM IST
  • துலாம் ராசிக்காரர்களுக்கு நிதிநிலை நன்றாக இருக்கும்.
  • நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.
  • வணிகத்தில் ஈடுபட்டுள்ள துலா ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் லாபம் அதிகமாகும்.
மகரத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, பண வரவு

Mars Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி செவ்வாய் கிரகம் கிரகங்களின் சேநாதிபதியாக கருதப்படுகிறார். வீடு, மனை, திருமண வாழ்க்கை, தைரியம் ஆகியவற்றின் காரணி கிரகமாக செவ்வாய் உள்ளார். பிப்ரவரி 5ஆம் தேதி செவ்வாய் தனது ராசியை மாற்றினார். அவர் மகர ராசியில் பெயர்ச்சி ஆகியுள்ளார். 

Add Zee News as a Preferred Source

செவ்வாய் கிரகம் மார்ச் 15ஆம் தேதி வரை மகர ராசியில் இருப்பார். சூரியன் புதனும் ஏற்கனவே இந்த ராசியில் இருக்கிறார்கள். இதனால் இந்த பிப்ரவரி மாதம் புத ஆதித்ய யோகம் மற்றும் ஆதித்ய மங்கள யோகம் ஆகிய யோகங்கள் உருவாகின்றன. இந்த இரு யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் (Zodiac Signs) இருக்கும். செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் சுப யோகங்களின் தாக்கம் 12 ராசிகளிலும் எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries)

பணியிடத்தில் ஊதி உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் வேலை, வியாபாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

ரிஷபம் (Taurus)

செவ்வாய் பெயர்ச்சி உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். பணியிடத்தில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். புதிய வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இப்போது புதிய வேலை கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும்.

மிதுனம் (Gemini)

அனைவரையும் அப்படியே நம்ப வேண்டாம். இந்த காலத்தில் உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படும். கஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.  தேவையற்ற செலவுகள் ஏற்படலாம்.

கடகம் (Cancer)

திருமண வாழ்க்கையில் இன்னல்கள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் மனக்கசப்புகள் ஏற்படும். வெளி இடங்களின் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும்.

 சிம்மம் (Leo)

இந்த காலத்தில் பல பயணங்களை மேற்கொள்வீர்கள். அவற்றால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கும் உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம். 

கன்னி (Virgo)

மன அமைதிக்கு பாதகம் ஏற்படலாம். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருங்கள். பணி இடத்தில் வேலை பளு அதிகரிக்கலாம். நிதி ரீதியாக யாருக்கும் ஆலோசனைகளை அளிக்க வேண்டாம்.

துலாம் (Libra)

நிதிநிலை நன்றாக இருக்கும். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் நல்ல செய்தி கிடைக்க கூடும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள துலா ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் லாபம் அதிகமாகும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.

விருச்சிகம் (Scorpio)

வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாகும். எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு இருக்கும்.  உங்களை நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த பழைய பிரச்சினைகள் தீரும். புதிய வேலை கிடைக்கும்

மேலும் படிக்க | முக்கிய மாற்றம் காணும் சனி, குரு: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வாழ்க்கை பிரகாசிக்கும்

தனுசு (Scorpio)

பண ரயம் ஏற்பட வாய்ப்புள்ளது. முதலீடு செய்வதற்கு முன் நன்றாக யோசித்து பின்னர் முதலீடு செய்யவும். குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் உண்டாகலாம்

மகரம் (Capricorn)

மனம் அமைதியின்றி இருக்கும். வீட்டில் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகள் வரலாம். செலவுகள் அதிகரிக்கும். இந்த சூழ்நிலையை தைரியத்துடன் எதிர்கொள்வது நல்லது. 

கும்பம் (Aquarius)

இந்த காலத்தில் நீங்கள் பலவித சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். வேலை செய்யும் இடத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆனால் கடினமான உழைப்பு இருந்தால் அனைத்தையும் சமாளித்து வெற்றி காணலாம். 

மீனம் (Pisces)

உங்கள் நேரம் நன்றாக இருக்கும். வாழ்வில் நிம்மதி இருக்கும். அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 75 ஆண்டுக்கு பின் சுக்கிரன், சனி, செவ்வாய் சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு பண வரவு, பொற்காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News