48 மணி நேரத்தில் செவ்வாய்-புதன் பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்
13 January Grah Gochar 2023: ஜோதிடத்தில், கிரகங்களின் நிலை மாற்றம் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையை பாதிக்கிறது. ஜனவரி 13ம் தேதி இரண்டு பெரிய கிரகங்கள் ராசியை மாற்றப் போகின்றன.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, பல பெரிய கிரகங்கள் ஜனவரி மாதம் பெயர்ச்சியாகப் போகின்றன. அதன்படி ஜனவரி 13 ஆம் தேதி, செவ்வாய் ரிஷப ராசியில் இடப் பெயர்ச்சியாகப்போகிறார். அதேசமயம், கிரகங்களின் அதிபதியான புதன் தனுசு ராசியில் உதயமாகுவார். கிரகங்களின் இந்த பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சுப மற்றும் அசுப வடிவில் காணப்படும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் சிறப்பான பலன்கள் தரும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 13, 2023 அன்று, மதியம் 12:07 மணிக்கு, செவ்வாய் ரிஷப ராசியில் இடப் பெயர்ச்சியாகுவார். மறுபுறம், காலை 5.15 மணிக்கு தனுசு ராசியில் புதன் உதயமாகுவார். இந்த இரண்டு கிரகங்களின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | ஜனவரியில் அஸ்தமனமாகும் சனியினால் ‘இந்த’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்!
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். இதன் போது தகராறில் சிக்கியவர்கள் நிவாரணம் பெறலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். இத்துடன் இந்த ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள்.
கடக ராசி
ஜோதிட சாஸ்திரப்படி கடக ராசிக்காரர்களுக்கு இரண்டு கிரகங்களின் இட மாற்றம் சாதகமாக அமையும். இதன் போது இந்த ராசிக்காரர்கள் பண நெருக்கடியில் இருந்து விடுபடுவார்கள். பணியிடத்தில் இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.
சிம்ம ராசி
இந்த ராசிக்காரர்கள் செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சியால் சுப பலன்களைப் பெறுவார்கள். பொருளாதார நிலை மேம்படும். பங்குச்சந்தை போன்றவற்றுடன் தொடர்புடையவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாயுடன் உங்கள் உறவு மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ