ஜனவரியில் அஸ்தமனமாகும் சனியினால் ‘இந்த’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்!

Saturn Transit 2023: சனி பெயர்ச்சிக்கு பிறகு அஸ்தமனமாகும் சனியினால் சிலருக்கு வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்ததாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 10, 2023, 02:46 PM IST
  • சனி மகர ராசியை விட்டு வெளியேறி கும்ப ராசியில் நுழைகிறார்.
  • சனி 2023 ஜனவரி 30 முதல் 28 நாட்களுக்கு அஸ்தமனம் ஆகிறார்.
  • சனி சஞ்சரிக்கும்போது, சிலருக்கு வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும்.
ஜனவரியில் அஸ்தமனமாகும் சனியினால் ‘இந்த’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்! title=

 

சனி அஸ்தமனம் 2023: ஜோதிடத்தில் சனி ஒரு மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது, ஏனெனில் சனி கர்மாவுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். எனவே, நீங்கள் அவரின் அருளால் வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்ததாக இருக்கும். அதே நேரத்தில், சனியின் கோபம் பண இழப்பு, நோய்கள், மன அழுத்தம், தொல்லைகள் ஆகியவற்றை அளிக்கிறது. ஜனவரி 17, 2023 அன்று சனி மகர ராசியை விட்டு வெளியேறி கும்ப ராசியில் நுழைகிறார். அதே நேரத்தில், சனி 2023 ஜனவரி 30 முதல் 28 நாட்களுக்கு அஸ்தமனம் ஆகிறார். சனி சஞ்சரிக்கும்போது, சிலருக்கு வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். அதே நேரத்தில், இதனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சனி எந்த ராசிக்கு மங்களகரமான, சாதகமான பலன்களைத் தருவார் என்பதை அறிந்து கொள்வோம். 

சனி இந்த ராசிகளின் தலைவிதியை மாற்றி அமைக்க உள்ளார்

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் அஸ்தமனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் ஒரு புதிய வேலையில் சேரலாம். உங்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். உங்கள் திட்டங்கள் நிறைவேறும். திருமண வாய்ப்பு ஏற்படும். 

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனி அஸ்தமனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சனி துலாம் ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகளை அள்ளித் தருவார். சில நல்ல செய்திகள் வந்து சேரும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். வருமானம் அதிகரிப்பத்தால், பொருளாதார சிக்கல்களில் இருந்து பெரும் நிவாரணம் கிடைக்கும். மாணவர்கள் ஒரு முக்கிய புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பினை பெறலாம். 

மேலும் படிக்க | Sani Peyarchi: சனியின் மாபெரும் பெயர்ச்சி, சிலருக்கு வீழ்ச்சி, சிலருக்கு மகிழ்ச்சி, முழு ராசிபலன் இதோ 

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனியின் அஸ்தமனம் நல்ல பலன்களைத் தரும். அவர்கள் திடீரென்று எங்கிருந்தோ பணம் வரவினை பெறுவார்கள். உத்தியோகத்தில் பெரிய லாபம் கிடைக்கும். வெற்றி பெற வலுவான வாய்ப்புகள் இருக்கும். வியாபாரத்தில் ஒரு முக்கிய நடவடிக்கை இறுதி செய்யப்படலாம். லாபம் அதிகரிக்கும். பழைய முதலீடுகளால் நன்மை அடைவீர்கள். ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு சிறப்பு நன்மைகள் கிடைக்கும். 

மேலும் படிக்க | மகர சங்கராந்தியில் செய்யும் ‘இந்த’ தானங்கள் தோஷங்களை நீக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News