குரு வக்ர பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில், தேவ குரு பிருஹஸ்பதி அறிவு, குரு, குழந்தைகள், கல்வி, மதப் பணி, புனித இடங்கள், செல்வம், தொண்டு, அறம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றுக்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறார். தனுசு மற்றும் மீனத்தின் அதிபதி தேவ குரு வியாழன் ஆவார். இவர் கடகத்தில் உச்சத்திலும் மகரத்தில் நீச்சமாகவும் இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரத்தின் படி, வியாழன் 29 ஜூலை 2022 அன்று மீனத்தில் வக்ரமானார். நவம்பர் 24 ஆம் தேதி அதிகாலை 4:35 மணிக்கு குரு பகவான் நேர் இயக்கத்தில் மாறுவார். வியாழனின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படும். சிலருக்கு அசுப பலன்களும் சிலருக்கு சுப பலன்களும் கிடைக்கும். வியாழனின் வக்ர நிலையால் அசுப பலன்களின் தாக்கத்தில் உள்ள ராசிக்காரர்கள் நவம்பர் 24 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.


குருவின் வக்ர நிலை இந்த ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும்:


மேஷம்: 


மேஷ ராசிக்காரர்களுக்கு வியாழன் 9 மற்றும் 12 ஆம் வீட்டிற்கு அதிபதி ஆவார். குருவின் தாக்கத்தால், இவர்கள் பணியிடத்தில் சக ஊழியர்களை நியாயமற்ற செயல்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம். வியாபாரத்தில் பிரச்சனைகள் வரக்கூடும். இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இல்லாததால், முதலீட்டைத் தவிர்க்கவும்.


ரிஷபம்: 


இந்தக் காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்களுக்குச் செலவுகள் அதிகரிக்கும். அதன் விளைவாக பொருளாதாரச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். உடல்நிலை மோசமாகலாம். ஆகையால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 


மேலும் படிக்க| அக்டோபர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், பண மழை பொழியும்: உங்க ராசி இதுவா? 


மிதுனம்: 


மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்ப பிரச்சனைகள் வரக்கூடும். அவர்கள் வீட்டில் சில சச்சரவுகளை சந்திக்க நேரிடலாம். புதிய தொழில் அல்லது வியாபாரத்தை தொடங்க விரும்பும் மிதுன ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரம் சாதகமாக இருக்காது என்பதால் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.


கன்னி: 


கன்னி ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல்நலக் கோளாறுகளும் இருக்கலாம். இந்த கால கல்லத்தில் அனைவருடனும் மிகுந்த பொறுமையுடன் நடந்துகொள்ளுங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். 


துலாம்: 


துலா ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். தொழில்/வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். வாழ்க்கை துணையுடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் சில பிரச்சனைகள் வரக்கூடும். வீடு, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Mars Transit: மூன்றே வாரங்களில் 'இந்த' ராசிகளின் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கும்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ