சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்.. நல்ல காலம் ஆரம்பமாகும்

Sani Vakra Peyarchi: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவரது ஒவ்வொரு அசைவும் மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

Sani Vakra Peyarchi: சனி பகவான் ஜூன் 30-ம் தேதி அதிகாலை வக்ரப் பெயர்ச்சி அடைய உள்ளார். சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சனி வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /10

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரகப் பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன.

2 /10

சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். இவரது ஒவ்வொரு அசைவும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகின்றது.

3 /10

சனி பகவான் ஜூன் 30 அதிகாலை வக்கிரப் பெயர்ச்சி அடைய உள்ளார். அவர் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். சனி பகவானின் வக்ர பெயர்ச்சி முக்கியமான ஜோதிட நிகழ்வாக உள்ளது. 

4 /10

சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

5 /10

ரிஷபம்: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் தற்போது கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். முதலீடுகளை செய்ய இது ஏற்ற நேரமாக இருக்கும். அதிகாரிகள் உங்கள் பணியால் மகிழ்ச்சி அடைவார்கள். பண வரவு நன்றாக இருக்கும்.

6 /10

மிதுனம்: சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் உங்கள் படைப்பாற்றல் அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குழந்தைகளால் நல்ல செய்தி வரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

7 /10

சிம்மம்: சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பல பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பண வரவு அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.

8 /10

கன்னி: சனி வக்ர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

9 /10

சனி பகவானின் அருள் பெற சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை பாராயணம் செய்யலாம். ஏழை எளியவர்களுக்கு தானம் செய்பவர்களை சனி பகவான் காத்து அருள்கிறார்.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.