இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நல்ல நாள் இன்று. மாசி மாத பெளர்ணமி நாளான இன்று மாசி மகம் அனுசரிக்கப்படுகிறது. இன்று புண்ணிய நதிகளில் நீராடுவதும், அன்னதானம் செய்வதும் பாவங்களைப் போக்கும் முக்தியைக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு, இது பிப்ரவரி 24, 2024 சனிக்கிழமை நாளான இன்று அனுசரிக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாசி மகத்தன்று இறை வழிபாடு செய்வது மிகவும் முக்கியமானது. இவை அனைவருக்கும் பொதுவாக தெரிந்த விஷயங்கள் என்றாலும், ஜோதிட நம்பிக்கைகளின்படி, மாசிமகத்தன்று கிரக சாந்தி செய்வது, கிரக தோஷங்களில் இருந்து விடுவிக்கும் என்று கூறப்படுகிறது. அனைத்து கிரகங்களால் ஏற்படும் துன்பங்களையும் நீக்கும் சிறப்பு பரிகாரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.


நவக்கிரக தொல்லைகள் விலகும் வழிகள்
 
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனீஸ்வரர், ராகு மற்றும் கேது என நவகிரகங்களும் ஒவ்வொருவருக்கும் அவரவர் ஜாதகத்திற்கு ஏற்றாற்போல பலன்களை வழங்குவார்கள். சிலருக்கு யோகத்தை கொடுக்கும் ஒரு காலகட்டம், மற்றொருவருக்கு தோஷத்தைக் கொடுக்கும். 


தோஷங்களால் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க, மாசி மாதம் வரும் பெளர்ணமி நாளன்று செய்யும் பிரார்த்தனைகளைத் தவிர சில பரிகாரங்களும் செய்யலாம்.


மேலும் படிக்க | திருமண தடை நீக்கி மாங்கல்ய வரம் தரும் வழிபாடுகள்! வழிபட்டால் கைமேல் மாங்கல்ய பலன்!


சூரிய தோஷத்தை நீக்க மாசி பெளர்ணமி பரிகாரம்


மாசி மகத்தின்று காலையில் குளித்தவுடன், சூரியனுக்கு அர்க்கியம் செய்யவும். அதன் பிறகு ஆதித்யா ஹ்ருதய ஸ்தோத்திரத்தை ஓத வேண்டும். இந்த நாளில் சிவப்பு சந்தனம், கோதுமை மற்றும் சிவப்பு ஆடைகளை தானம் செய்வது நல்லது. 


சந்திர தோஷத்தை நீக்க பரிகாரம்
பெளர்ணமி நாளான மாசி மகத்தன்று சந்திரனை சாந்திப்படுத்த இனிப்பு பொருட்கள், சர்க்கரை மற்றும் அரிசி தானம் செய்யுங்கள்.


செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்
செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரமாக, மாசி மகத்தன்று, உளுத்தம்பருப்பு, வெல்லம், சிவப்பு வஸ்திரம், செம்புப் பாத்திரங்கள் ஆகியவற்றை தானம் செய்யலாம்.


புதன் தோஷம் நீங்க பரிகாரம்
உங்கள் ஜாதகத்தில் புதன் நீச்சமடைந்திருந்தால், புதனை வலுப்படுத்த நெல்லிக்காய், எண்ணெய் மற்றும் பச்சை காய்கறிகளை தானம் செய்யுங்கள்.


மேலும் படிக்க | பாற்கடலை கடைந்த நாளை நினைவுபடுத்தும் மாசி மாத பிரதோஷம்! பக்தியுடன் அனுசரிப்பு!


குரு தோஷத்தால் திருமணத்தில் தடைகளுக்கு பரிகாரம்


மஞ்சள் கடுகு, குங்குமம், மஞ்சள் சந்தனம் ஆகியவற்றை மாசி மகத்தன்று தானம் செய்தால் திருமணத் தடைகள் நீங்கும். 


சுக்கிர தோஷ நிவர்த்தி
சுக்கிரனால் தோஷம் இருந்தால், கற்பூரம், நெய், வெண்ணெய், வெள்ளை எள் ஆகியவற்றை தானம் செய்யுங்கள்.


சனி தோஷம் நீங்க மாசிமக பரிகாரம்
கருப்பு எள், நல்லெண்ணெய், இரும்பு பாத்திரம், கருப்பு வஸ்திரம் போன்றவற்றை தானம் செய்தால் சனி தோஷம் நீங்கும்.
ராகு தோசம் நீங்க பரிகாரம்
போர்வைகள், உணவு, உள்ளாடைகள் போன்றவற்றை மாசி மகத்தன்று தானம் செய்தால் ராகு தோஷம் நீங்கும். 


கேது தோஷம் நீங்க பரிகாரம்
மாசி மகத்தன்று ஆடைகள் தானம் செய்தால், கேது தோஷம் நீங்கும்.


மேலும் படிக்க | Maasi Magam: முருகனுக்கு சுவாமிநாதன் என்ற பெயர் கிடைத்த நாள்! மாசி மகத்தின் பெருமை தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ