சனீஸ்வரரின் நீதி என்றும் தவறாது! ஆனால் கஷ்டங்களைக் குறைத்துக் கொள்ள பரிகாரம் உண்டு!
Saturn Transit Remedies : சனியின் வக்கிரப் பெயர்ச்சி, சிலருக்கு பாதகமானதாகவும் பலருக்கு சாதகமானதாகவும் இருக்கலாம். நல்லது கெட்டது என எந்த பலனாக இருந்தாலும், இந்த பரிகாரங்கள் நன்மை தரக்கூடியவை
மனிதனுக்கு கர்ம வினையின்படி நல்லது கெட்டதையும், இன்பங்களையும் துன்பங்களையும் தவறாமல் கொடுக்கும் சனீஸ்வரர் நீதிமான் என்று மரியாதையுடனும் பயத்துடனும் பார்க்கப்படுகிறார். நவகிரகங்களிலும் மிகவும் மந்தமாக நகரக்கூடிய சனி பகவான், ஒரு ராசியில் இரண்டரை காலம் வரை பயணம் செய்தாலும், வருடத்திற்கு ஒருமுறை நான்கு மாதம் வக்கிரகதியில் அதாவது எதிர்ச்சுற்றில் பயணம் செய்வார்.
அண்மையில் (2024 ஜூன் 29) சனி வக்கிரப் பெயர்ச்சி நடைபெற்றது. தற்போது எதிர்திசையில் வலம் வரத் தொடங்கியிருக்கும் சனியின் வக்கிரப் பெயர்ச்சி, சிலருக்கு பாதகமானதாகவும் பலருக்கு சாதகமானதாகவும் இருக்கலாம். நல்லது கெட்டது என எந்த பலனாக இருந்தாலும், இந்த பரிகாரங்கள் நன்மை தரக்கூடியவை.
நல்லதாக இருந்தால், நன்மைகளை அதிகரித்தும், தீமைகளாக இருந்தால் கெட்டதை குறைத்தும் கொடுக்க வேண்டும் என சனீஸ்வரரின் மனதை இளகச் செய்யக்கூடிய பரிகாரங்கள் மிகவும் சுலபமானவை, ஆனால், நல்ல பலன் கொடுப்பவை ஆகும்.
சனீஸ்வரரின் வக்கிர பெயர்ச்சி பரிகாரம்
சனீஸ்வரர், நவகிரகங்களின் நாயகரான சிவனுக்கு மட்டுமே கட்டுப்படுபவர். எனவே, தினசரி சென்று சிவாலயத்தில் வழிபாடு செய்யலாம். குறைந்தது வாரத்தில் ஒரு நாளாவது பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று சிவனை தரிசனம் செய்து வழிபாடு செய்தால் சிவனின் அருள் கிடைக்கும்.
மேலும் படிக்க | குப்த நவராத்திரியும் செவ்வாய்ப் பெயர்ச்சியும் ஏற்படுத்தும் ஜாதகரீதியிலான மாற்றங்கள்!
சிவன் கோவிலில் இருக்கும் நவகிரகங்களில் சனிபகவானுக்கு எள்ளெண்ணெய் கொண்டு தீபம் போடுவது சனியின் வக்கிரப்ப் பெயர்ச்சியின் தாக்கத்தை குறைக்கும். ஆனால் எள் தீபம் ஏற்றுவதை தவிர்க்கவும்.
அனுமன் வழிபாடு
வீட்டின் அருகில் சிவன் கோவில் இல்லை, பெருமாள் கோவில் தான் இருக்கிறது என்றால் அங்கு சென்று அனுமாரை வழிபடலாம். சனிக்கிழமை தோறும் அனுமானை வழிபட்டால், அது சனீஸ்வரரை வழிபடுவதற்கு சமமானதாக இருக்கும். அனுமனை 3 முறை வலம் வந்தால் சனி பகவானின் வக்ர பலன்கள், நேர்மறையானவைகளாக மாறிவிடும்.
அதேபோல, சனிக்கிழமை நாள் ஒன்றை தேர்ந்தெடுத்து அன்று வெண்கல கிண்ணத்தில் நல்லெண்ணையை நிரப்பி அதில் உங்கள் முகத்தை பார்க்கவும். பிறகுக், அந்தக் கிண்ணத்தை எண்ணெயுடன் சேர்த்து ஒரு பிராமணருக்கு தானமாக கொடுத்துவிடவும்.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: தீபாவளி வரை இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம்
குறைகளை குறைக்கும் குதிரை லாடம்
குதிரையின் கால்களில் பயன்படுத்தப்பட்ட பழைய லாடம் கிடைத்தால், அதை வாங்கி வீட்டின் முகப்பில், நிலைக்கதவுக்கு மேல் அதனை அடித்து வைக்கவும். இது சனீஸ்வரரின் அருளை வீட்டிற்கு கொண்டு வரும். அதேபோல, அந்த லாடத்தில் உள்ள இரும்பிலிருந்து மோதிரம் செய்து அணியலாம். இந்த மோதிரத்தை வலது கையின் நடுவிரவில் அணிந்தால் சனீஸ்வரரின் வக்கிர காலத்தில் கெடுபலன்கள் ஏற்படுவது குறையும்.
சனிக்கிழமை நாள் சனீஸ்வரருக்கு உகந்த நாளாகும். அன்று, எள் சேர்த்த சாதத்தை சமைத்து, அன்னதானம் கொடுப்பது, காக்கைக்கு உணவிடுவது ஆகியவை, சனீஸ்வரரின் அருளைப் பெற்றுத் தரும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ