வீட்டில் வறுமை நீங்கி செல்வம் கொழிக்க வில்வ செடியை இன்றே நடவும்
வில்வ இலைக்கு பலவிதமான முக்கியத்துவம் உள்ளது. முக்கூறுகளைக் கொண்ட வில்வ இலையின், மூன்று இலைகள், திரிசூலத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. வில்வ இலைகளின் மூன்று கூறுகள் இந்து கடவுளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளைக் குறிக்கும் என்று நம்பப்படுகிறது.
வில்வ இலைக்கு பலவிதமான முக்கியத்துவம் உள்ளது. முக்கூறுகளைக் கொண்ட வில்வ இலையின், மூன்று இலைகள், திரிசூலத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. வில்வ இலைகளின் மூன்று கூறுகள் இந்து கடவுளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளைக் குறிக்கும் என்று நம்பப்படுகிறது.
சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.சிவ பூஜையில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் அனைத்தும் அகன்று தோஷங்கள் மறைந்து, சிவபெருமானின் அருள் பார்வை கிடைக்கும் என்பது நம்பிக்கை. வில்வ இலைகளை சிவனுக்கு அர்ப்பணம் செய்வதால் மூன்று ஜென்ம பாவம் விலகும் என்பது நம்பிக்கை
வில்வ பழங்கள் மற்றும் வில்வ இலைகள் சிவ பெருமானுக்கு மிகவும் பிடிக்கும். வில்வ இலை அர்ச்சனை இல்லாமல் சிவ வழிபாடு முழுமையடையாது என்று கூறலாம்.
அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கும் வில்வம்
வாஸ்து சாஸ்திரத்தில் கூட, வில்வ மரம் மற்றும் செடி மிகவும் மங்களகரமானது என்று விவரிக்கப்பட்டுள்ளது, இந்த ஒரு செடி வீட்டில் இருந்தால் வீட்டின் அனைத்து வாஸ்து தோஷங்களும் நீங்கும். வில்வ செடி நடப்பட்ட இடம் காசி தீர்த்தம் போன்று புனிதமானது மற்றும் போற்றப்படுகிறது என சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. மறுபுறம், வில்வ செடி வீட்டிற்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வருகிறது.
வறுமை நீங்கி செல்வம் பெருகும்
எந்த வீட்டில் வில்வ மரம் அல்லது செடி இருக்கிறதோ, அந்த வீட்டில் எப்போதும் சிவ பெருமானின் சிறப்பு அருள் இருக்கும். அத்தகைய வீட்டில் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாமல், எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
மேலும் படிக்க | அனைத்து தோஷங்களும் நீங்க, சிவனை வில்வ இலை கொண்டு பூஜிக்கவும்
வில்வம் செடி அல்லது மரம் இருக்கும் வீட்டில் அன்னை லட்சுமி எப்போதும் குடியிருப்பாள். அந்த வீட்டில் பணத் தட்டுப்பாடு இருக்காது. வீட்டில் வில்வம் செடியை நட்டவுடனேயே அந்த வீட்டில் உள்ளவர்களின் பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். பணம் மற்றும் உணவு தானியங்கள் வீட்டில் எப்போதும் வீட்டில் நிறைந்திருக்கும்.
வீட்டில் வில்வ செடியை நடுவதன் மூலம், ஒரு நபரின் தனது கர்ம பலன்களில் இருந்து விடுபடும் வழி ஏற்படுகிறது. அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மேலும் படிக்க | ஜாகத்தில் வியாழன் கிரகம் வலுவாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்
சிவ பெருமான மட்டுமல்லாது, பல தெய்வங்கள் வில்வ செடியில் வசிப்பதாக நம்பப்படுகிறது. இந்த மரம் நிறைய நேர்மறை ஆற்றலை கொண்டுவருகிறது. வீட்டில் உள்ளவர்களை புத்துணர்வுடனும் சுறுசுறுப்பாகவும் வைக்கிறது.
வில்வம் செடி இருக்கும் வீட்டில் சூனியம், கண்திருஷ்டி போன்ற பாதிப்பு எதுவும் இருக்காது. இத்துடன் ஜாதகரின் சந்திர தோஷங்களும் நீங்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; குபேரன் ஆகப் போகும் 2 ராசிக்காரர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR