வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க பணம் பிரதானம் அல்ல என்றாலும், போராட்டம் நிறைந்த இந்த வாழ்க்கையில் பண பலம் இருந்தால், வாழ்க்கை கொஞ்சம் எளிதாகிறது என்பது உண்மைதான். பணம் வைத்திருப்பது பிரச்சினைகளைத் தீர்ப்பதை எளிதாக்குகிறது என்பதே இதன் பொருள். மறுபுறம், பணம் இல்லை என்றால், அதனால் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே, செல்வச் செழிப்புடன் இருக்க அன்னை லட்சுமி தேவியின் ஆசிகள் என்றென்றும் நிலைத்திருக்க, சில பரிகாரங்கள் மற்றும் பூஜைகளை செய்வது பலனளிக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.


பகவத கீதையின் 11வது அத்தியாயத்தை பாராயணம் செய்தல்


பகவான் கிருஷ்ணர் அருளிய ஸ்ரீமத் பகவத் கீதையை பாராயணம் செய்வதன் மூலம் வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை பெறலாம் (Astro Remedies). குறிப்பாக, இதன் 11வது அத்தியாயத்தை பாராயணம் செய்வதால் தரித்திர நிலை நீங்கும். பகவத் கீதையை பாராயணம் செய்வதை தவிர, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை, குறிப்பாக பெண்களை எப்போதும் மதிக்கவும். பெண்களை இழிவுபடுத்தி ஒருபோதும் அவமதிக்காதீர்கள். இதனால், அன்னை மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.


அன்னை மகாலக்ஷ்மியின் அருளை பெற உதவும் கிராம்பு பரிகாரம்


வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கையில் ஐந்து கிராம்புகளை எடுத்துச் செல்வதால், எதிர்மறை சக்திகள் நம்மிடம் இருந்து விலகி இருக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். கிராம்புகளை ஒரு சிவப்பு துணியில் வைத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்வது நல்லது. வீட்டிற்குத் திரும்பி வந்து உங்கள் வீட்டின் பூஜை அறையில் அதனை வைத்து விடுங்கள்.


தீபம் ஏற்றி கனக்தாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும்.


அன்னை மகாலட்சுமி படத்திற்கு முன் நெய் தீபம் ஏற்றி தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்பவருக்கு பணத் தட்டுப்பாடு ஏற்படாது. வீட்டில் செல்வத்திற்கு குறைவிருக்காது. கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம் வீட்டில் செல்வ வலம் நிறைந்து மகிழ்ச்சியும் செழிப்பும் அபரிமிதமாக இருக்கும். அன்னை மகாலட்சுமியை நியமத்துடன் வழிபடுவதன் மூலம் அவள் மகிழ்ச்சியடைந்து, தன் பக்தனுக்கு அபரிமிதமான செல்வத்தை அள்ளி வழங்குகிறாள்.


மேலும் படிக்க | குப்த நவராத்திரியும் செவ்வாய்ப் பெயர்ச்சியும் ஏற்படுத்தும் ஜாதகரீதியிலான மாற்றங்கள்!


செல்வ வளம் பெறுவதற்கான சனிக்கிழமை பரிகாரங்கள்


சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாள். சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுதல் சிறப்பு. இந்த நாளில் இரும்பு பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். இதனுடன், கருப்பு நிற ஆடைகளை வாங்குவதும் இந்த நாளில் சுபமானதாக கருதப்படுவதில்லை. நாய்க்கு உணவளித்தல், ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்தல், வாழ்க்கையில் சுபிட்சத்தை கொண்டு வரும்.


சூரிய பகவானை வழிபடுவதன் மூலம் கிரக தோஷங்கள் நீங்கும்


சூரியன் பகவானை வணங்கி, தவறாமல் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பவருக்கு,  ஒன்பது கிரகங்களும் அனுகூலமாக இருக்கும். ஒன்பது கிரகங்களின் தோஷங்களும் நீங்கும். காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தில் இருந்தும் விடுதலை கிடைக்கும்


லட்சுமி பூஜை செய்யும் போது கடைபிடிக்க வேண்டியவை


ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்யும் போது, குளித்து சுத்தமாக, மனதில் ஈடுபாட்டுடன் பூஜை செய்ய வேண்டும். நாம் அனைவரும் வீட்டில் பூஜை செய்யும் போது உட்கார ஆசனங்களைப் பயன்படுத்துகிறோம். இந்நிலையில், லட்சுமி தேவி வணங்கி பூஜை செய்பவர்கள், இளஞ்சிவப்பு நிற ஆசனத்தை பயன்படுத்த வேண்டும். 


மேலும் படிக்க | பண்டரிபுரம் விட்டலனுக்கு பாதயாத்திரை! பால் காவடி தயிர்-காவடி என லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ