நாம் பிறந்தது முதல் இறப்பது வரை, நம் வாழ்வில் நடக்கக்கூடிய அனைத்து நன்மைகளையும் தீமைகளையும் பாதிக்கும் அம்சம் நவகிரகங்கள். நவகிரகங்கள் அருள் பரிபூரணமாக இருந்தால் நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அடைந்து மகிழ்ச்சியாக இருக்கலாம். நவகிரகங்களின் அருளை பரிபூரணமாக பெற சில பரிகாரங்களை செய்வதும், சில பழக்கங்களை கடைபிடிப்பதும் உதவும்.
எண்ணெயில் கிராம்பு சேர்த்து தீபம் ஏற்றுதல்
தீபங்கள் வாழ்க்கையின் இருளை நீக்கி ஒளியை பரப்ப கூடியவை. வீட்டில் செல்வம் பெருகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கவும், காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றுவது மிக முக்கியம். தீபம் ஏற்ற நல்லெண்ணெய் அல்லது நெய் உபயோகிப்பது மிகவும் சிறப்பு. நல்லெண்ணையில் கிராம்பு சேர்த்து தீபம் ஏற்றுவதால், வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த வாழ்க்கை கிடைக்கும் என்கிறது (Astro Remedies) சாஸ்திரங்கள்.
விலங்குகளுக்கு உணவளித்தல்
பொதுவாகவே பசித்த வயிற்றை நிரப்புவது மிகப்பெரிய தர்மமாக கருதப்படுகிறது. அன்னதானத்தை போல சிறந்த தானம் எதுவும் இல்லை என்று இந்து மதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பதால், நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கி நவகிரகங்களின் அருளை பரிபூரணமாக கொண்டு வரும் என்று, சாஸ்திரங்கள் கூறுகின்றன. காலையிலும் மாலையிலும், நம் வீட்டிற்கு அருகில், தெருவோரம் சுற்றிக் கொண்டிருக்கும், மாடு, நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு உணவளிப்பது மிகவும் நல்லது.
செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல்
பசுமை நிறைந்த செடிகள், மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்க கூடியவை. இதை சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன. சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும், வீட்டில் செடிகள் இருப்பது மிகவும் அவசியம். அவற்றை பூக்கும் பூக்களை, கடவுளுக்கு அர்ப்பணித்து மகிழலாம். செடிகளின் இலைகள் மற்றும் காய்கள், நமக்கு ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் அளிக்கக் கூடியவை. இந்நிலையில் மாலையில் செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதை வழக்கமாகக் கொண்டால், நவகிரகங்கள் மனம் மகிழும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்க, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை தவறாமல் செய்யவும்.
மேலும் படிக்க | சூரிய அஸ்தமனத்திற்கு பின்.. ‘இவற்றை’ தானம் செய்தால் லட்சுமி கடாட்சம் போய் விடும்..!!
வீட்டிற்கு செல்லும் போது வாங்க வேண்டிய பொருட்கள்
வேலை நிமித்தமாகவோ, அல்லது பிற காரணங்களுக்காகவோ, வீட்டை விட்டு வெளியில் செல்லும் நிலையில், வீட்டிற்கு திரும்ப செல்லும் போது, சில குறிப்பிட்ட பொருட்களை வாங்கிச் செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். கடவுளுக்கு அர்ப்பணிக்க பூக்களை வாங்கிச் செல்லுதல், வீட்டில் இருக்கும் குழந்தை பெரியவர்களுக்காக, பழங்கள் வாங்கிச் செல்லுதல் ஆகியவற்றை வழக்கமாக கொள்வதால், வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும்.
நவகிரக வழிபாடு
நம் வாழ்வில், கிரக நிலைகளால் ஏற்படும் தாக்கத்தை தவிர்க்கவும், கிரக தோஷங்களில் இருந்து விடுதலைப் பெறவும் நவகிரக வழிபாடு சிறந்தது. சூரியன், சந்திரன், செவ்வாய் புதன், குரு, சுக்கிரன் சனி, ராகு கேது போன்ற நவகிரகங்கள் நமக்கு தொடர்ந்து அருளை அள்ளிக் கொடுக்க, கோவிலில் உள்ள நவகிரகங்களை, சுற்றி வந்து வழிபடலாம். எனினும் எந்த கோவிலுக்கு சென்றாலும், அங்குள்ள மூலவரையும், பிற சந்நிதிகளில் உள்ள தெய்வங்களையும் தரிசித்த பிறகு தான், நவகிரகங்களை சுற்றிவர வேண்டும் என்பதை மனதில் கொள்வது நல்லது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | 12 ஆண்டுகளுக்கு பின் இணையும் குரு - செவ்வாய்... இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ