வாழ்க்கையில் உறவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.  பரஸ்பரம் அன்பும் மரியாதையும் உள்ள உறவுகள், நீடித்து நிலைக்கும் உறவுகளாக இருக்கும். எப்போதும் வாழ்க்கையில் முன்னேறவும், பெரிதாக எதையேனும் சாதிக்கவும்  நம்மை ஊக்குவிக்கின்றன. அதேசமயம், சில உறவுகளில், மன அழுத்தம், பரஸ்பர ஒட்டாத தன்மை போன்றவற்றால் எப்போதும் உறவு கசப்புடன் இருக்கும். இது இருவருக்குமே பாதிப்பை ஏற்படுத்தும். வாழ்க்கையில் நிம்மதி என்பதே இருக்காது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரத்தில் பொருந்தாத ராசிகள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்டையில், எந்த ராசிக்காரர்ககளுக்கிடையே, உறவில் கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது  என்பதை அறிந்து கொள்ளலாம். 


மேஷம் மற்றும் கடகம் - நெருப்புக்கும் நீருக்கும் எந்த தொடர்பும் இருக்க முடியாது. அதே போல கடக ராசிக்காரர்களுக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கும் பொருத்தம் இருக்க முடியாது. மேஷ ராசிக்காரர்கள், தங்களையும் அறியாமலேயே சில சமயங்களில் கடக ராசிக்காரர்களின் உணர்வுகளை மிகவும் அதிக அளவில் காயப்படுத்துவார்கள்.


ரிஷபம் மற்றும் சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்போதும்  தன் மீது காதல் அன்பைப் பொழிய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள் ஆதரவையும், அரவணைப்பையும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அந்த அன்பை கொடுக்க முடியாது.  ரிஷப ராசிக்காரர்களுக்கு தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்பதை நன்றாக அறிந்தவர்களும் கூட. அதனால், அவர்கள் தங்கள் வழியில் சுதந்திரமாக இருக்கவே விரும்புவார்கள். 


மிதுனம் மற்றும் விருச்சிகம் - மிதுன ராசிக்காரர்கள்  விருச்சிக ராசிக்காரர்களிடம் வெகு விரைவில் ஈர்க்கப்படுவார்கள். ஆனால் விருச்சிக ராசிக்காரர்கள் மிதுன ராசிக்காரர்களின் அன்பினால் திருப்தி அடைய மாட்டார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் வாழ்க்கையில் ஒத்துப் போவது மிகவும் சவாலானதாக இருக்கும்.


மேலும் படிக்க | ASTRO Traits: காதல் துணையை உண்மையாக நேசிக்கும் ‘5’ ராசிகள்..


கன்னி மற்றும் தனுசு - கன்னி ராசிக்காரர்கள், மென்மையான மற்றும் அமைதியான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள்,  தனுசு ராசியால் ஏற்படும் இடையூறுகள் அவர்களுக்கு சிக்கலை உண்டாக்கும். தனுசு ராசிக்காரர்கள் பறவை போல சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால் தனுசு ராசிக்காரர்களின் இந்த குணம் கன்னி ராசிக்காரர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.


மீனம் மற்றும் துலாம் - மீனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் பரஸ்பரம் இடைஞ்சல்களை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். மீன ராசிக்காரர்கள் அமைதியான மற்றும் மென்மையான இயல்பு கொண்டவர்களை விரும்புகிறார்கள். மறுபுறம், துலாம் மக்கள் தைரியமான மற்றும் மன வலிமை மிக்கவர்களுடன் இருக்க விரும்புகிறார்கள்.


மகரம் மற்றும் சிம்மம் - மகர ராசிக்காரர்கள் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் நாகரீகம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள். சிம்ம ராசிக்காரர்கள் தடாலடியாக செயல்படுபவர்களாகவும் கோபம் அதிகம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மகர ராசிக்காரர்களின்  வழி காதல் வழி. ஆனால், சிம்ம ராசிக்காரர்கள்  அவர்களது அன்பை உணர மாட்டார்கள். 


மேலும் படிக்க | Astro Traits : பேச்சுத்திறனால் காரியத்தை சாதித்துக் கொள்ளும் ‘5’ ராசிகள்!


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ