Astrological Remedies For Diabetes: இன்றைய வேகமான மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையால் பல உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் நோய்கள் மக்களை ஆட்கொள்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது நீரிழிவு நோய். இது வாழ்க்கை முறை தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாகும். ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, உணவுமுறை, பரம்பரை காரணம் என இதற்கு பல காரணங்கள் உள்ளன. இது சிறியவர்கள், இளைஞகள், முதியவர்கள் என அனைவரையும் பாடாய் படுத்துகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீரிழிவு நோயும் ஜோதிடமும்


நீரிழிவு நோய்க்கு (Diabetes) ஜோதிட ரீதியாக சில தீர்வுகளை காண முடியும். ஜோதிட சாஸ்திரப்படி, ஜாதகத்தில் 3 கிரகங்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது. இந்த 3 கிரகங்கள் எவை? சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உள்ள ஜோதிட தீர்வுகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


சர்க்கரை நோய்க்கு காரணமாக உள்ள 3 கிரகங்கள் 


ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரது ஜாதகத்தில் முக்கியமாக 3 கிரகங்கள் பலவீனமாகவோ, பாதிக்கப்பட்டோ அல்லது அசுப நிலையிலோ இருந்தால், அந்த நபருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த கிரகங்கள் குரு (Jupiter), செவ்வாய் (Mars) மற்றும் சந்திரன் (Moon) ஆகும். இந்த கிரகங்கள் ஜாதகத்தின் 6 மற்றும் 8 வது வீட்டில் இருந்தாலோ, பலவீனமாக இருந்தாலோ, ஏதாவது அசுப கிரக விளைவுகளால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அந்த நபர் உடல் ரீதியாக பலவீனமாகிறார். பல நோய்கள் அவரை ஆட்கொள்கின்றன. 


நீரிழிவு, சுத்தமான இரத்தம், மன அழுத்தம்: இவற்றுக்கு பொறுப்பான கிரகங்கள் எவை?


குரு பகவான் இனிப்பு பொருட்கள் மற்றும் செரிமான செயல்முறைகளை கட்டுப்படுத்தும் கிரகமாக உள்ளார். அவர் பலவீனமானால் இரத்த சர்க்கரை அளவு (Blood Sugar Level) அதிகரிப்பதற்கான வாய்ப்பு பெரிதும் அதிகரிக்கிறது. அதே நேரத்தில், செவ்வாய் இரத்தத்தின் சுத்த, அசுத்த தன்மைக்கு பொறுப்பாக உள்ளார். சந்திரன் மன அழுத்தத்தையும், நரம்பு மண்டலத்தையும் கட்டுப்படுத்தும் கிரகமாக கருதப்படுகிறார். மன அழுத்தம் (Mental Tension) என்பது உடல் ரீதியான ஒரு பிரச்சனையாகும். இது நீரிழிவு உட்பட பெரும்பாலான நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது. சனி, புதன் மற்றும் ராகு-கேது ஆகிய கிரகங்களும் நீரிழிவு நோயில் ஓரளவு பங்களிப்பை கொண்டுள்ளன. 


நீரிழிவு நோயை கட்டுப்படுத்த ஜோதிட ரீதியான வைத்தியம்


- ஜோதிட சாஸ்திரத்தின்படி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கிரகமான குருவை வலுப்படுத்த, மஞ்சள் மற்றும் பிற மஞ்சள் மசாலாக்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். இந்த கிரகத்தை வலுப்படுத்த, புஷ்பராகம் ரத்தினத்தை அணியலாம். குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழனன்று விரதம் இருப்பது நல்லது. வியாழன் அன்று மஞ்சள் வஸ்திரம், வெல்லம் மற்றும் உளுந்து தானம் செய்வதும் மிகவும் நன்மை பயக்கும்.


மேலும் படிக்க | புத்தரின் அருளுடன் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்! பொன் பொருள் அருளாசி பெறும் ராசிகள்!


- செவ்வாய் கிரகம் வலுப்பெற பவழம் அணிந்து செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கவும். செப்பு பாத்திரங்களில் உணவு சமைக்கவும், செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்கவும். முடிந்தவரை சிவப்பு நிற ஆடைகளை அணியுங்கள்.


- சந்திரனை வலுப்படுத்த, முத்துக்களை அணிவது உகந்ததாக கருதப்படுகிம்றது. திங்கட்கிழமை விரதம் இருக்கவும். தினமும் காலையில் சூரியபகவானுக்கு வெள்ளிப் பாத்திரத்தில் நீர் விடவும். 


- பொதுவாக நோய்களிலிருந்து குணமடையவோ அல்லது விடுபடவோ, சூரிய பகவானை வணங்குவது அவசியமாகும். அவரை மகிழ்விக்க ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் படிக்கலாம். மேலும் இந்த நாளில் ஏழை எளியவர்களுக்கு உணவு, ஆடைகள் ஆகியவற்றை தானம் செய்யலாம். 


இந்த அனைத்து நடவடிக்கைகளுடன், வழக்கமான உடற்பயிற்சி, யோகா, தியானப் பயிற்சி, முறையான உணவு ஆகியவை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சமநிலைப்படுத்த உதவி மன அழுத்தத்தைக் குறைக்கின்றன. 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இவை பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. நீரிழிவு நோயாளிகள் இந்த ஜோதிட பரிந்துரைகளுடன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், தொல்லை தீர்ந்து நன்மை நடக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ