குரு உதயம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்... பணம், பதவி, புகழ் அனைத்து கிட்டும்

Guru Udhayam Palangal:குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 21, 2024, 03:42 PM IST
  • குரு உதயம் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரப் போகிறது.
  • இந்த நேரத்தில், கடக ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது வெற்றிகரமாக முடிவடையும்.
குரு உதயம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்... பணம், பதவி, புகழ் அனைத்து கிட்டும் title=

Guru Udhayam Palangal: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ராசிகள் மட்டுமல்லாமல் கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. கிரகங்களின் ராசி மற்றும் இயக்க மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். 

கிரக மாற்றங்கள் காரணமாக அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். கிரகங்கள் சில நேரங்களில் நேராகவும், சில சமயங்களில் வக்ர நிலையிலும் நகரும். சில நேரங்களில் அஸ்தமிக்கும் இவை, பின்னர் உதயமாகும். 

சுப கிரகமாக கருதப்படும் குரு பகவான் ஜூன் 3 ஆம் தேதி ரிஷப ராசியில் உதயமாகவுள்ளார். சமீபத்தில்தான், அதாவது மே மாதம்  1 ஆம் தேதி ரிஷபத்தில் குரு பெயர்ச்சி நடந்தது. இப்போது அவர் ரிஷபத்திலேயே உதயமாகவுள்ளார். குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். நிதி நிலை மேம்படும். அந்த ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

ரிஷபம் (Taurus)

ஜோதிட சாஸ்திரப்படி, குரு உதயம் ரிஷபத்தில்தான் நடக்கிறது. ஆகையால், ரிஷப ராசிக்காரர்கள் அதிகப்படியான நற்பலனளை அடைவார்கள். இந்த நேரத்தில் திட்டங்களை வகுத்து செயல்பட்டால் அவை நிச்சயம் வெற்று பெறும். இவற்றால் அதிக பலன் கிடைக்கும். ரிஷப ராசிக்காரர்களின் பொருளாதார நிலையும் இந்த நேரத்தில் வலுவடையும். உங்கள் வருமானமும் அதிகரிக்கும். அலுவலக பணிகளில் இருக்கும் நபர்களின் சம்பளமும் உயரலாம். இந்த நேரத்தில் உங்கள் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும், உங்கள் இலக்கை அடைய கடினமாக உழைத்து அதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஆதாயம் அடைவார்கள்.

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்

கடகம் (Cancer)

குரு உதயம் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரப் போகிறது. இந்த நேரத்தில், கடக ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது வெற்றிகரமாக முடிவடையும். இந்த நேரத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் உற்சாகம் உச்சம் தொடும். அனைத்து வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் கனவு நிறைவேறும்.

சிம்மம் (Leo)

சிம்ம ராசியில் உள்ள வியாபாரிகளுக்கு குரு பெயர்ச்சியும் குரு உதயமும் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் உங்கள் வேலையை மாற்ற நினைத்தால், அதற்கு இது தகுந்த நேரமாக இருக்கும். குரு உதயத்தின் தாக்கத்தால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கும் பண லாபம் உண்டாகும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா? மரணபயம் போக்கும் வைகாசி விசாக வழிபாடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News