புத்தரின் அருளுடன் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்! பொன் பொருள் அருளாசி பெறும் ராசிகள்!

Gajalakshmi yoga on Buddha Purnima: வைகாசி மாத வளர்பிறையின் இறுதி நாளான முழு நிலவு நாளில் கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகிறது. இது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபமான பலன்கள் கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 22, 2024, 03:56 PM IST
  • வைகாசி மாத பெளர்ணமி
  • வளர்பிறையின் இறுதி நாளான முழு நிலவு நாள்
  • புத்த பூர்ணிமா கஜலட்சுமி ராஜயோகம்
புத்தரின் அருளுடன் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்! பொன் பொருள் அருளாசி பெறும் ராசிகள்! title=

நாளை வைகாசி மாத பெளர்ணமி நாள், அரசு விடுமுறை தினமாகும். புத்தர் ஞானமடைந்த இந்த நன்னாள், இந்தியா உட்பட பலநாடுகளில் பொதுவிடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது. பெளத்தம் மட்டுமல்ல, இந்து மதத்திலும் பெளர்ணமி மிகவும் விசேஷமான நன்னாள் ஆகும். மத மற்றும் சமய நம்பிக்கைகளின்படி வைகாசி மாத பவுர்ணமி அனுசரிக்கப்படும் நிலையில், மற்றுமொரு சிறப்பு இந்த நாளில் ஏற்படுகிறது.

வைகாசி மாத பவுர்ணமி நாளில் கிரகங்களின் அற்புதமான சேர்க்கை நடைபெறுகிறது என்பது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி மாத வளர்பிறையின் இறுதி நாளான முழு நிலவு நாளில், அதாவது புத்த பூர்ணிமா நாளில் விஷ்ணு மற்றும் அன்னை லட்சுமியை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

இந்த நாளில், வானில் கிரகங்களின் அமைப்பு மிகவும் சிறப்பாக அமையும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். கிரகங்களின் அமைப்புப்படி, இந்த மாத பெளர்ணமி நாளன்று கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகிறது. புனிதரான புத்தரை நினைவு கூறும் புத்த பூர்ணிமா நாளில், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபமான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | ஜூன் 5 சனி ஜெயந்தி! சனீஸ்வரரின் அருட்கடாட்சம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

துலாம்
கஜலட்சுமி யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், இந்த காலகட்டத்தில், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறலாம். வருமானத்திற்கான புதிய வழிகளும் திறக்கும். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறிகளும் தென்படுகிறது. பணியிடத்தில் புதிய பொறுப்புகள் உங்களை வந்து சேரலாம். பொறுப்புகள் கூடினாலும், அது எதிர்காலத்தில் நன்மைகளை வழங்குவதாக இருக்கும். அதுமட்டுமல்ல, கஜலட்சுமி அன்னையின் முழு ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு.  

சிம்மம் 
சிம்ம ராசிக்காரர்களுக்கு புத்த பூர்ணிமா நாளன்று உருவாகும் கஜலக்ஷ்மி யோகத்தால் அருமையான வாழ்க்கை அமையும். பொருளாதார நிலை மேம்படும், நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்கும் சூழல் ஏற்படும். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் நல்ல காலம் இது. புதிய வாகனம், நிலம், வீடு போன்றவற்றையும் வாங்கலாம். பணியிடத்தில் சுமூகமான சூழல் நிலவும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் உங்கள் மனக்குறை நீங்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கஜலக்ஷ்மி யோகம் எதிர்பாராத நல்வாய்ப்புகளை கொண்டு வந்து சேர்க்கும். நீண்ட நாட்களாக ஒத்தி போட்டுவந்த வேலைகளை முடிக்க முடியும். நிதி நிலைமை மேம்படும் அளவிற்கு காரியங்கள் கைகூடும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டப்படும். தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இது என்று சொன்னால் அதில் தவறில்லை. 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், தொல்லை தீர்ந்து நன்மை நடக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News