புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், தொல்லை தீர்ந்து நன்மை நடக்கும்

Budhan Peyarchi: புதன் பெயர்ச்சியால் ரிஷப ராசியில் ஒரே நேரத்தில் மூன்று ராஜயோகங்கள் உருவாகும். இது தவிர கன்னி, மகரம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்கள் சதுர்கிரஹி யோகத்தால் நான்கு மடங்கு பலன்களைப் பெறுவார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 22, 2024, 02:07 PM IST
  • தனுசு ராசிக்காரர்களுக்கு, புதன் பெயர்ச்சி நிதி விஷயங்களில் வெற்றிகரமானதாக இருக்கும்.
  • உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவீர்கள்.
  • தனிப்பட்ட வாழ்க்கையும் அற்புதமாக இருக்கும்.
புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், தொல்லை தீர்ந்து நன்மை நடக்கும் title=

Budhan Peyarchi: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஏற்படுகின்றன. சில ராசிகளில் இவற்றால் சுப விளைவுகளும் சில ராசிகளில் அசுப விளைவுகளும் காணக்கிடைகின்றன.  

மே 31-ம் தேதி சுக்கிரன் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகிறார். ஏற்கனவே ரிஷப ராசியில் சுக்கிரன், குரு மற்றும் சூரியன் இருப்பதால் இந்த கிரகங்களுடன் புதனின் சேர்க்கை நடக்கும். புதனுக்கும் சூரியனுக்கும் இடையில் புதாதித்ய ராஜயோகம் உருவாகும். புதனுக்கும் சுக்கிரனுக்கும் இடையே லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகும். ரிஷபத்தில் சுக்கிரனும் குருவும் இணைவதால் ஏற்கனவே கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகியுள்ளது. அதாவது புதன் பெயர்ச்சியால் ரிஷப ராசியில் ஒரே நேரத்தில் மூன்று ராஜயோகங்கள் உருவாகும். இது தவிர கன்னி, மகரம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்கள் சதுர்கிரஹி யோகத்தால் நான்கு மடங்கு பலன்களைப் பெறுவார்கள். வணிகத்தில் சிறந்த வெற்றிகள் கிடைக்கும். புதன் பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகங்களால் அதிகப்படியான பலன்களை பெறவுள்ள ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

கன்னி (Virgo): வருமானம் அமோகமாக இருக்கும்

கன்னி ராசிக்காரர்களுக்கு, புதன் பெயர்ச்சி பல நல்ல பலன்களை அளிக்கும். இந்த காலகட்டத்தில், அலுவலகத்தில் உங்கள் மேல் அதிகாரிகளின் எதிர்பாராத ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்கத் துறையில் அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலைக்கான பல புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

துலாம் (Libra): வியாபாரத்தில் புதிய யோசனைகள் வெற்றி பெறும்

துலாம் ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் எதிர்பாராத லாபங்களைப் பெறுவார்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மாற்றம் செய்ய இது நல்ல நேரமாக கருதப்படுகின்றது. இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கும் என்றாலும், உங்கள் நல்ல வருவாயின் காரணமாக இருப்பு நன்றாக இருக்கும். நிதி நெருக்கடி ஏற்படாது. வியாபாரத்தில் புதிய யோசனைகளுடன் செயல்பட்டால், எதிர்காலத்தில் பெரிய பலன்களைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில், நோய்கள் உங்களை தொந்தரவு செய்யலாம். கவனமாக இருந்து உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

மேலும் படிக்க | இன்னும் 37 நாள் தான்! சனியின் வக்ரகதியால் அருமையான எதிர்காலம்! 3 ராசிகளுக்கு அருமை!

தனுசு (Sagittarius): வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள்

தனுசு ராசிக்காரர்களுக்கு, புதன் பெயர்ச்சி நிதி விஷயங்களில் வெற்றிகரமானதாக இருக்கும். உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையும் அற்புதமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் வலுவான ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும். செல்வம் பெருகும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்னும் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானமும் நன்றாக இருக்கும், உங்கள் செலவுகளும் அதிகரிக்கும். இந்த விடுமுறைக் காலத்தில், உங்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவர வாய்ப்புள்ளது. 

மகரம் (Capricorn): பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன

இந்த பெயர்ச்சி மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத வெற்றியைத் தரும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளுடன் உறவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும். பணி இடத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த காலகட்டத்தில் பணத்தை சேமிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். தனிப்பட்ட உறவுகளைப் பற்றி பேசுகையில், உங்கள் மனைவியுடனான உங்கள் நல்லிணக்கம் முன்பை விட சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் திருப்தி அதிகரிக்கும். பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்தால் லாபம் காணலாம். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். உங்கள் ஆரோக்கியமும் மேம்படும், பழைய பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எந்த மாத பெளர்ணமியில் முருகனை வணங்குவது? முழுநிலவு நாளில் வழிபடப்படும் தெய்வங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News