பஞ்ச மஹா யோகம்: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம், தலைவிதி மாறும்
Panch Yogam: பிப்ரவரி 19ம் தேதி முதல் ஷஷ், ஜ்யோஷ்டா, ஷங்கம், சர்வார்த்தசித்தி, கேதாரம் உள்ளிட்ட 5 யோகங்கள் உருவாகியுள்ளன. இதன் பலனாக 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படவுள்ளன.
பஞ்சயோகமும் ராசிகளில் அதன் தாக்கமும்: ஜோதிட சாஸ்திரப்படி, 9 கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசியையும், இயக்கங்களையும் மாற்றிக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் இவை தனியாக ஒரு ராசியில் நுழையும், சில நேரங்களில் கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் இணைந்தும் ராசிகளில் இருக்கும். இப்படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசியில் சேர்ந்து இருப்பது சில சமயங்களில் ராசிக்காரர்களுக்கு நல்ல பலங்களைத் தரும், சில சமயம் சங்கடங்களையும் வழங்கும்.
இம்முறை பிப்ரவரி 19ம் தேதி முதல் ஷஷ், ஜ்யோஷ்டா, ஷங்கம், சர்வார்த்தசித்தி, கேதாரம் உள்ளிட்ட 5 யோகங்கள் உருவாகியுள்ளன. இந்த 5 பெரிய யோகங்களின் இந்த அரிய நிகழ்வு 70 ஆண்டுகளுக்குப் பிறகு காணப்படுகிறது. இதன் பலனாக 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படவுள்ளன. இவர்கள் வீட்டில் பணமும், செல்வச்செழிப்பும் நிரம்பி வழியும். அந்த 4 அதிர்ஷ்டசாலி ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பஞ்ச மகா யோகத்தால் இந்த ராசிகளுக்கு கிடைக்கும் ஜாக்பாட் பலன்கள்:
கும்பம்
ஐந்து மகா யோகங்களின் இந்த அரிய சேர்க்கை கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமாக இருக்கப்போகிறது. பிறருடன் சேர்ந்து செய்யும் தொழிலில் லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
மேலும் படிக்க | தினசரி ராசிப்பலன் - இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் சூடுபிடிக்கும். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் நல்ல லாபம் கொடுக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தடைபட்ட உங்களின் வேலைகள் அனைத்தும் இப்போது முடிவடையும். பணம் சம்பந்தமான பிரச்சனைகள் விலகும். இந்த சுப வேளையில் எந்த வேலையைத் தொடங்கினாலும் அது நல்ல பலனைத் தரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு
உத்தியோகத்தில் இருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்கள் பணியில் வெற்றி பெறலாம். வீட்டிற்கு வாகனம் அல்லது புதிய சொத்து வாங்கும் யோகம் இப்போது உருவாகும். வியாபாரத்தில் பல பெரிய ஒப்பந்தங்களைப் பெற யோகம் உள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்பைப் பார்த்து, உங்களுக்கு சில பெரிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழில் செய்பவர்கள் புதிய கூட்டுத் தொழிலைத் தொடங்க இது நல்ல நேரமாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொண்டு மகிழ்ச்சி பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைநுள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மிதுன ராசியில் செவ்வாய்! பங்குனியில் பட்டையை கிளப்பப் போகும் ராசி இது தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ