பிப்ரவரி கடைசி வாரத்தில் அடிக்கப் போகுது ஜாக்பாட்! வார ராசிபலன்கள் மார்ச் 4 வரை

Horoscope Predictions: பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் யாருக்கு என்ன நடக்கும்? யாருக்கு அதிர்ஷ்டம், யாருக்கு நேரம் சுபமாக இருக்கும்? இது வாராந்திர ராசிபலன்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 24, 2023, 03:51 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் விலகும்
  • சிம்ம ராசியினருக்கு வேலைப்பளு கூடும்
  • 26 பிப்ரவரி முதல் 4 மார்ச் 2023 வரை ராசிபலன்
பிப்ரவரி கடைசி வாரத்தில் அடிக்கப் போகுது ஜாக்பாட்! வார ராசிபலன்கள் மார்ச் 4 வரை title=

வார ராசிபலன்: 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரம் சிலருக்கு வெற்றியைத் தரும். சில ராசிக்காரர்களுக்கு மத்திமமான பலன்கள் கிடைக்கும்.     பிப்ரவரி 26 முதல் மார்ச் மாதம் 4ம் தேதி வரை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்?  யார் அடுத்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

மேஷம்
கலை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். விவாதங்களை குறைத்து கொள்வது நல்லது. மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும். யோகம் நிறைந்த நாள்.

ரிஷபம்
மாமன்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். உணவு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். மனதில் இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ரகசியமான சில ஆய்வுகளின் மூலம் தெளிவு பிறக்கும். தடைகள் நிறைந்த நாள்.

மிதுனம்
மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். துணிவு நிறைந்த நாள்.

கடகம்
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். கல்வி சார்ந்த பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். ஆர்வம் நிறைந்த நாள்.

மேலும் படிக்க | புதன் அஸ்தமனம், இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் உண்டாகும்

சிம்மம்
எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப திருப்பங்கள் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு வித்தியாசமான முறையில் தீர்வு காண்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.

கன்னி
எதிர்பாராத அலைச்சல்களால் மாற்றங்கள் ஏற்படும். தனம் சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கணிதம் தொடர்பான துறைகளில் சிந்தித்து செயல்படவும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள்.

துலாம்
கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். வெளிப்படையான குணத்தின் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வர்த்தகம் சார்ந்த தொழிலில் மேன்மை ஏற்படும். சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். எதிர்பாராத சில நிகழ்வுகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

விருச்சிகம்
மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதுவிதமான ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை உருவாக்கும். எதிர்ப்புகளின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். உபரி வருமானம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். பங்குச் சந்தை சார்ந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். நிம்மதி நிறைந்த நாள்.

மேலும் படிக்க | Astro Alert: மார்ச் மாதத்தில் கிரகம் என்ன சொல்லுது? எச்சரிக்கையா இல்லைன்னா பிரச்சனை

தனுசு
விளையாட்டு சார்ந்த துறைகளில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு ரசனை திறனில் மாற்றம் உண்டாகும். தாய்மாமன் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். சாதுர்யமாக செயல்பட்டு செல்வாக்கை பெருக்கி கொள்வீர்கள். சாஸ்திரம் தொடர்பான குழப்பம் நீங்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

மகரம்
தொழில் சார்ந்த கல்வியில் சாதகமான சூழல் அமையும். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். மனை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் கவனத்துடன் செயல்படவும். சொந்த ஊர் செல்வது சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கட்டிட பணிகளில் புதிய வாய்ப்புகள் அமையும். போட்டிகள் நிறைந்த நாள்.

கும்பம்
மனதில் இருந்த குழப்பம் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிறு தூர பயணங்களால் மனதில் தெளிவு ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.

மீனம்
நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். நிர்வாகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் பாதுகாக்கும் திறன் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பிப்ரவரி 26 முதல் மார்ச் மாதம் 4ம் தேதி பணமழையில் தங்கத்தை அள்ளப் போகும் ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News