சனி பகவானின் கோபப் பார்வையிலிருந்து காக்கும் நீல நிறம்! பயன்படுத்துவது எப்படி!

ஜோதிடத்தில் சனி பகவானுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இவர் மகரம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதி. ஜோதிடத்தில், சனி தேவரை சில இடங்களில் கருப்பு நிறமாகவும் சில இடங்களில் நீல நிறத்திலும் சித்தரிப்பதைக் காணலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 24, 2023, 11:05 PM IST
  • கல்வி மற்றும் வேலை செய்யும் இடத்தில் வெளிர் நீல நிறத்தை பயன்படுத்தவும்.
  • ஜாதகத்தில் ஏழரை நாட்டு சனி, சனி திசை, சனி மஹாதசை நடந்து கொண்டிருந்தால், நீலக்கல் அணிவது நல்ல பலன் தரும்.
  • சனி பகவானின் கோப பார்வையையும், ஏழரை நாட்டு சனியின் பாதிப்பையும் தவிர்க்க நீல நிறம்.
சனி பகவானின் கோபப் பார்வையிலிருந்து காக்கும் நீல நிறம்! பயன்படுத்துவது எப்படி! title=

ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகத்திற்கும் உகந்த நிறம் மற்றும் ராசி உள்ளது. இந்த நிறங்கள் அனைத்தும் நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களை நீக்க, அந்த கிரகங்களுடன் தொடர்புடைய வண்ணங்களின் பொருட்களைப் பயன்படுத்துவது சுப பலன்களை கொடுக்கும் என்றும், அசுப பலன்களை அகற்றும் என்றும் கூறப்படுகிறது. ஜோதிடத்தில் சனிக்கு தனி முக்கியத்துவம் உண்டு. இவர் மகரம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதி. சனி ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்குகிறார். இது சனி திசை என்று அழைக்கப்படுகிறது. சனியின் திசை ஏழரை ஆண்டுகள் நீடிக்கும். இது ஏழரை நாட்டு சனி  என்று அழைக்கப்படுகிறது.

சனி பகவானின் நிற உறவு

ஜோதிடத்தில், சனி தேவரை சில இடங்களில் கருப்பு நிறமாகவும் சில இடங்களில் நீல நிறத்திலும் சித்தரிக்கப்படுகிறது. நீல நிறம் ஆன்மீகம் மற்றும் அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையது. இருப்பினும், இந்த நிறத்தைப் பயன்படுத்தும் போது, சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நீல நிறத்தை சரியான நேரத்தில் மற்றும் சரியான முறையில் பயன்படுத்துவது வாழ்க்கையில் மகத்தான வெற்றியை அளிக்கிறது. ஜோதிடத்தில், நீல நிறம் நீர், வளர்ச்சி, அமைதி, ஆரோக்கியம், ஆறுதல் மற்றும் மகிழ்ச்சியின் சின்னமாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!

சனி தோஷம் வராமல் இருக்க நீல நிறத்தை பயன்படுத்தும் முறை

சனி பகவானின் கோப பார்வையையும், ஏழரை நாட்டு சனியின் பாதிப்பையும்  தவிர்க்க நீல நிறம் மிகவும் முக்கியமானது. ஏழரை நாட்டு சனி அல்லது சனி திசையினால் உங்களுக்கு பாதிப்பு இருந்தால், அதிகபட்சமாக நீல நிறத்தைப் பயன்படுத்துவது உங்களுக்குப் பலனளிக்கும். சனியின் மஹாதசை, ஏழரை நாட்டு சனி அல்லது சனி திசையின் அசுப பலன்களை போக்க வேண்டுமானால், நீல நிற கைக்குட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும். சாஸ்திரங்களின்படி, நீல நிற பூக்கள் சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும், எனவே சனிக்கிழமையன்று சனி தேவருக்கு அபராஜிதா பூவை அர்ப்பணிக்கவும்.

ஏழரை நாட்டு சனி

இது தவிர, கல்வி மற்றும் வேலை செய்யும் இடத்தில் வெளிர் நீல நிறத்தை பயன்படுத்தவும். ஜாதகத்தில் ஏழரை நாட்டு சனி, சனி திசை, சனி மஹாதசை நடந்து கொண்டிருந்தால், நீலக்கல் அணிவது நல்ல பலன் தரும், ஆனால் இதற்கு முதலில் ஜோதிடரிடம் ஆலோசனை கேட்பது சரியாக இருக்கும். சனி தோஷம் ஏற்படாமல் இருக்க கருப்பு அல்லது நீல நிற காலணி, வஸ்திரம், நீல மலர்களை தானம் செய்ய வேண்டும்.

(பொறுப்பு துறப்பு:  இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே. ZEE NEWS எந்த வகையான அங்கீகாரத்தையும், தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. எந்தவொரு தகவலையும் அல்லது நம்பிக்கையையும் செயல்படுத்துவதற்கு முன், தொடர்புடைய நிபுணரை அணுகவும்.)

மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News