Rahu Nakshatra Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. இவற்றால் சில ராசிகளில் சுப விளைவுகளும் சில ராசிகளில் பிரச்சனைகளும் ஏற்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகு பெயர்ச்சி:


ஜோதிடத்தில், ராகு ஒரு நிழல் கிரகமாக பார்க்கப்படுகிறார். ராகுவும் கேதுவும் எப்போதும் தலைகீழ் இயக்கத்திலேயே பயணிக்கிறார்கள். அதாவது இவர்களது இயக்கம் வக்ர நிலையிலேயே இருக்கின்றது. சனி பகவானை போலவே ராகு, கேது கிரகங்கள் மீதும் பொதுவாக மக்களுக்கு அச்சமிருப்பதை காண்கிறோம். ராகு சுப நிகழ்வுகளுக்கு இடையூறு செய்யும் கிரகமாகவும் பல விஷயங்களுக்கு தடையாக இருக்கும் கிரகமாகவும் கருதப்படுகிறார். இதன் காரணமாகத்தான் ராகு காலத்தில் எதையும் செய்ய வேண்டாம் என கூறப்படுகின்றது. ஆனால், சில சமயங்களில் ராகு பல நன்மைகளையும் செய்கிறார்.


ராகு பெயர்ச்சிக்கு ஜோதிடத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது. இந்த மாதம், அதாவது ஜூலையில், ராகு சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி ஜூலை 8, 2024 அன்று, அதிகாலை 04:11 மணிக்கு நடக்கும். ராகு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு இந்த காலத்தில், பண வரவு, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, பதவி உயர்வு, லாபம் என பல வித நன்மைகள் சாத்தியமாகும். ராகு நட்சத்திர மாற்றத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பத்வில் காணலாம். 


ராகு நக்ஷத்திர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை (Zodiac Signs) பற்றி இங்கே காணலாம்:


ரிஷபம் (Taurus): ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நிலுவையில் இருக்கும் பணிகள் நல்ல முறையில் நடந்து முடியும். ராகு நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். பண வரவு அதிகரிக்கும்.  இதனால் பொருளாதார நிலை மேம்படும். 


மேலும் படிக்க | சூரியனின் அருளால் ‘இந்த’ ராசிகளுக்கு ஆடி மாதம் அமர்களமாய் இருக்கும்! 


கடகம் (Cancer): ராகு நட்சத்திர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இந்த காலத்தில் மாத வருமானம் அதிகரிக்கும். இதனால் பொருளாதார நிலை முன்னேறும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் மூலம் நல்லச் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 


மகரம் (Capricorn): ராகு நட்சத்திர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு வாழ்வில் நல்ல வாய்ப்புகளை அளிக்கும். பண வரவு அதிகமாகும். இதனால் நிதி ஆதாயத்திற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நீண்ட காலமாக நீங்கள் திட்டமிட்டிருந்த பணிகள் இப்போது நடந்து முடியும். பல குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பணி இடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஜூலை 7 முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்: கொட்டிக்கொடுப்பார் சுக்கிரன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ