6 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வியாபாரத்தில் வெற்றி, பண வரவு அதிகமாகும்
Mars Transits 2024: ஜூலை 12ம் தேதி செவ்வாய் ராசியி மாற்றம். செவ்வாயின் இந்த ராசி மாற்றம் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
Mars Transits 2024: நவகிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுவர் செவ்வாய் பகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் 45 நாட்கள் எடுத்துக் கொள்ளும். இவருடைய ராசி மாற்றம் மிகவும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த நிகழ்வால் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக ஆவார். அதனுடன் செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக ஆவார்.
இந்நிலையில் செவ்வாய் பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும் சுக்கிரன் மற்றும் செவ்வாய் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். செவ்வாய் பகவானின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளித் தரும். அவை எந்தெந்த ராசிகள் என்பது இப்போது காணலாம்.
மேலும் படிக்க | நாளை சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்
ரிஷபம் (Taurus Zodiac Sign): செவ்வாய் உங்கள் ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். அதன் நல்ல பலன் ரிஷப ராசிக்காரர்களுக்கு தெரியும். செவ்வாயின் தாக்கத்தால் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். இந்த 46 நாட்களில் நீங்கள் மிகப்பெரிய நிதி ஆதயத்தை பெறுவீர்கள். வியாபாரம் கூடும். லாபம் உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
சிம்மம் (Leo Zodiac Sign): சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அளவில்லா பலன்கள் கிடைக்கும். அரசு வேலை கிடைக்கலாம். படிப்பில் கவனம் செலுத்தவும். செவ்வாயின் தாக்கத்தால், சில அரசாங்க வேலை கிடைக்கலாம். 46 நாட்களில் புதிய கார் அல்லது வீடு வாங்கலாம். பணியிடத்தில் தைரியம், துணிச்சல் அதிகரிக்கும்.
கன்னி (Virgo Zodiac Sign): செவ்வாயின் ராசி மாற்றத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும். ஜூலை 12 முதல் நிதி முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கலாம். அதிக பணம் பெறுவீர்கள். இந்த நேரத்தில், உங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கும் நல்ல காலம். உங்களின் பதவி உயரலாம்.
விருச்சிகம் (Scorpio Zodiac Sign): செவ்வாய்ப் பெயர்ச்சியின் சாதகமான பலன் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். அரசுப் பணிகளில் வெற்றி உண்டாகும். அரசாங்க வேலை கிடைக்கலாம். ஜூலை 12க்கு பிறகு நேரம் சாதகமாக இருக்கும். தொழில் முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
மீனம் (Pisces Zodiac Sign): செவ்வாயின் ராசி மாற்றத்தால் உங்களின் தைரியம் அதிகரிக்கும். வேலையில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல காலம். வேலை மாற்ற ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இந்த 46 நாட்களில் வெளிநாடு பயணம் மேற்கொள்ளலாம். தன்னம்பிக்கையால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: தீபாவளி வரை இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ