கும்பத்தில் சனிப்பெயர்ச்சி 2023: இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனி பகவான் தன்னுடைய ராசியை மாற்றுகிறார். அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான், மனிதர்களின் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கிறார். 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் ஜனவரி 17 ஆம் தேதி அன்று பெயர்ச்சியாவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் கும்ப ராசியில் நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மகர ராசியை விட்டு விலகி கும்ப ராசிக்குள் பிரவேசிப்பது ஒரு பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கபடுகின்றது. சனி ஒரு ராசியில் பிரவேசிக்கும் போதெல்லாம், அந்த ராசிக்கு முன்னும் பின்னும் உள்ள ராசியில் ஏழரை நாட்டு சனி தொடங்குகிறது. இது தவிர மற்ற 2 ராசிகளிலும் சனி தசை தொடங்குகிறது. இந்த வகையில் ஜனவரி 17ஆம் தேதி நடக்கவுள்ள சனியின் ராசி மாற்றம் சிலருக்கு கடினமான நாட்களின் ஆரம்பமாக அமையும். இருப்பினும், சனிப்பெயர்ச்சி சிலருக்கு சுப பலன்களையும் தரும்.


இந்த ராசிகளில் சனி தசை தொடங்கும்
 
சனி கும்ப ராசியில் நுழைந்தவுடன் கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் மீது சனி தசை தொடங்கும். கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடினமான கட்டம் தொடங்கும் என்று கூறலாம். இவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். பண இழப்பு ஏற்படலாம். நோய்வாய்பட வாய்ப்புள்ளது. மறுபுறம், மிதுனம் மற்றும் துலா ராசிகளுக்கு சனி தசை முடிவடையும். 


மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று அதிஷ்டத்தை அள்ளும் 3 ராசிகள்! 


இந்த ராசிகளில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம்


சனி கும்ப ராசிக்கு வந்தவுடனேயே மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் ஆரம்பிக்கும். அதாவது இந்த வருடம் சனியால் மீன ராசிக்காரர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதனால், அவர்களுக்கு அவர்களது கடின உழைப்பின் முழு பலனும் கிடைக்காமல் போகலாம். வாழ்க்கையில் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரக்கூடும். பண இழப்பு, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.  


இதுதவிர மகரம், கும்ப ராசிக்காரர்களுக்கும் ஏழரை நாட்டு சனியின் பாதிப்பு ஏற்படும். இருப்பினும், மகர ராசியில் ஏழரை நாட்டு சனியின் கடைசி கட்டம் தொடங்கும் என்பதால், அவர்களின் துன்பங்கள் கணிசமாகக் குறையும். விலகும் வேளையில் சனி அவர்களுக்கு சுப பலன்களைத் தருவார்.


இந்த பரிகாரங்கள் மூலம் நிவாரணம் பெறலாம்


ஏழரை நாட்டு சனியால் வரும் துன்பங்களில் இருந்து விடுபட சில பரிகாரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சனிக்கிழமைகளில் சனி பகவானின் கோவிலுக்கு சென்று அவரை பிரார்த்திக்கலாம். அரச மரத்தின் கீழ் தீபம் ஏற்றி வழிபடலாம். அனுமனின் பக்தர்களை சனி பகவான் சோதிப்பது இல்லை. ஆகையால், அனுமான் சாலிசா சொல்வதும் நல்ல பலன்களை அளிக்கும். சனி சாலிசா, சனி ஸ்தோத்திரங்கள், கோளறு பதிகம் ஆகியவற்றை பாராயணம் செய்யலாம். ஏழை எளியவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உதவி செய்வது சனி பகவானை மகிழச்செய்யும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் பம்பர் லாபம், செல்வம் பெருகும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ