சனிப்பெயர்ச்சி 2023: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் சனி பகவான். அவர் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாவார். இந்த மாதம், அதாவது ஜனவரி மாதம் 17 ஆம் தேதி அவர் தனது ராசியை மாற்றுகிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் கும்ப ராசிக்குள் நுழைவார். மகரமும் கும்பமும் சனியின் சொந்த ராசியாகும்.
சனி 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்ப ராசியில் பிரவேசிப்பது மிகவும் சிறப்பான நிகழ்வாக கருதப்படுகின்றது. வேத ஜோதிட சாஸ்திரப்படி சனி ஒரு ராசியில் சுமார் இரண்டரை வருடங்கள் இருந்துவிட்டு அடுத்த ராசிக்கு செல்வார். ஜோதிட சாஸ்திரத்தில் ஏழரை நாட்டு சனிக்கு முக்கியத்துவம் உண்டு. ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தால் ராசிக்காரர்கள் பல வித பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.
சனி ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசியில் பிரவேசிக்கிறார். அதில் சனி 140 நாட்களுக்கு வக்ர நிலையிலும், 33 நாட்களுக்கு அஸ்தம நிலையிலும் இருப்பார். ஜனவரி 17-ம் தேதி கும்ப ராசிக்கு சனி பிரவேசிக்கும் போதே, சில ராசிகளில் ஏழரை நாட்டு சனியும் சிலருக்கு சனி தசையும் தொடங்கும். சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
மீனத்தில் ஏழரை நாட்டு சனி தொடங்கும்
சனி தனது ராசியை மாற்றியவுடன் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் தொடங்கும். தனுசு ராசியில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் முடிவடையும். 2023 ஜனவரி 17க்கு பிறகு மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் தொடங்கும். மகர ராசியில் ஏழரை நாட்டு சனியின் மூன்றாம் கட்டமும், கும்பத்தில் இரண்டாம் கட்டமும், மீனத்தில் முதல் கட்டமும் தொடங்கும்.
இவர்கள் மீது அசுப பார்வை
2023 ஆம் ஆண்டில், கும்பம் மற்றும் மீன ராசிக்காரர்கள் மீது சனியின் அசுப பார்வை இருக்கக்கூடும். வேலையில் தடைகள் ஏற்படும். நோய்கள் வரலாம். மறுபுறம், மகர ராசிக்காரர்கள் மீது ஏழரை நாட்டு சனியின் கடைசி கட்டம் இருப்பதால், வேலையில் வெற்றி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். ஏழரை சனியின் கடைசி கட்டத்தில் மக்களின் பிரச்சனைகள் குறைந்து வெற்றி கிடைக்கும்.
கடகம் மற்றும் விருச்சிக ராசியில் சனி தசை தொடங்கும்
2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி சனியின் ராசி மாற்றத்தால் மிதுனம், துலாம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் முடிவடையும். இதன் காரணமாக இவ்விரு ராசிக்காரர்களும் மிகுந்த நிம்மதியைப் பெறுவார்கள். சனி கும்ப ராசியில் சஞ்சரிப்பதால் கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் மீது சனி தசையின் தாக்கம் தொடங்கும். இவர்களுக்கு பணியிடத்தில் சவால்கள் அதிகரிக்கும். தொழிலில் நஷ்டம் ஏற்படும், வேலையில் மாற்றம் ஏற்படும்.
ஏழரை நாட்டு சனி: நிவாரணம்
வேத ஜோதிடத்தில் சனிதோஷம் உள்ளவர்களுக்கு பல வகையான பரிகாரங்கள் சொல்லப்படுகிறது. சனியின் அசுப பலன்களைக் குறைக்க, ஒவ்வொரு சனிக்கிழமையும் கோயிலுக்கு சென்று சனிபகவானை வணங்க வேண்டும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடலாம். கருப்பு எள், போர்வை, கருப்பு உளுந்து, காலணிகள் மற்றும் செருப்புகளை தானம் செய்வதும் புண்ணியத்தை அளிக்கும். இது தவிர, சனி சாலிசா மற்றும் ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்வதாலும் நன்மை கிடைக்கும்.
மேலும் படிக்க | 15 நாட்களுக்குள் 2 முறை பெயரும் சனீஸ்வரரால் கொள்ளை பணம் சம்பாதிக்கப் போகும் ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ