புதன்+ சுக்கிரன்+சனி இணைவு: டிசம்பர் 2022 மாதம் கிரக நிலைகளின் அடிப்படையில் மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி டிசம்பர் கடைசி வாரத்தில் சனி, புதன், சுக்கிரன் ஆகிய மூன்றும் ஒரே ராசியான மகரத்தில் கூடும். சனி ஏற்கனவே மகர ராசியில் உள்ளது. மறுபுறம், டிசம்பர் 28 அன்று, புதன் கிரகம் தனுசு ராசிக்குள் நுழைகிறது. அதற்குஅடுத்த நாள், டிசம்பர் 29, 2022 அன்று, சுக்கிரனும் தனுசு ராசியிலிருந்து வெளியேறி மகர ராசிக்குள் நுழைகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிசம்பர் மாத இறுதியில், சனியின் ராசியான மகரத்தில் புதன், சுக்கிரன் மற்றும் சனி கூடுவது மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவரும். 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் இந்த மாற்றம் வரும். ஆனால் இந்த நிலை 4 ராசிக்காரர்களுக்கு கவலைகளை அதிகரிப்பதாக இருக்கும். கவலைகளில் இருந்து விடுபட முடியாவிட்டாலும், பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள சற்று முன்னெச்சரிக்கையாக இருக்கலாமே....


ரிஷபம்: டிசம்பரில் புதன்-சுக்கிரன் மற்றும் சனி சேர்க்கை ரிஷப ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம். தொழிலில் மந்த நிலை இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால், பண வரவு சாதகமாக இருக்கும் என்றாலும், அதை எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது நல்லது. 


மேலும் படிக்க | மாதங்களில் நான் மார்கழி! கண்ணனுக்கு பிடித்தமான 2022 மார்கழி மாத ராசி பலன்கள்


சிம்மம்: மகர ராசியில் புதன், சுக்கிரன், சனி ஒன்று சேர்ந்தவுடன் சிம்ம ராசிக்காரர்களுக்கு சற்று பின்னடைவு ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைத்தாலும், அதிக கவனம் செலுத்தி, தேவைக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். நன்றாக வேலை செய்தால் அதன் பலன், பிறகுதான் கிடைக்கும். வார்த்தைகளை உபயோகிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.  


துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனி, புதன், சுக்கிரன் இணைவதால் மனதில் சஞ்சலங்கள் தோன்றும். வாகனம் வைதிருப்பவர்களுக்கு செலவு ஏற்படும். வருமானத்தில் சற்று சுணக்கம் ஏற்படும். புதிய வழிகளில் பணம் கிடைத்து பொருளாதார முன்னேறும் என்ற திட்டமிட்டிருந்தாலும், அது ஏமாற்றம் அளிக்குக்ம். எந்த முடிவுகள் எடுத்தாலும் நன்கு ஆலோசித்து எடுக்கவும்.


தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனி-புதன்-சுக்கிரன் சற்று கவலையை ஏற்படுத்துவார்கள். குடும்பத்தில் இணக்கமாக செல்லவும். வேலையில் கவனமாக இருக்கவும். செலவுகள் அதிகரிக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல நேரம் தொடங்கினாலும், யாரையும் முழுமையாக நம்பிவிட வேண்டாம்.  


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.) 


மேலும் படிக்க | மகரத்தில் இணையும் சனி - புதன் - சுக்கிரன்; ‘இந்த’ ராசிகளுக்கு பம்பர் பலன்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ