சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தை குறைக்கும் பரிகாரங்கள்! நவம்பர் 11 முதல் கட்டாயம்
Venus Transit: விருச்சிக ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம், அனைவருக்கும் வெவ்வேறு விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும், நிவர்த்தி பரிகாரங்கள், கெடுதலை குறைத்துக் கொடுக்கும்
புதுடெல்லி: துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகவிருக்கிறார். செல்வம், செழிப்பு, அழகு, அன்பு மற்றும் காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் இடம் மாறுவது, அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், விருச்சிக ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம், அனைவருக்கும் வெவ்வேறு விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும், நிவர்த்தி பரிகாரங்கள், கெடுதலை குறைத்துக் கொடுக்கும்
சுக்கிரனின் பெயர்ச்சியால் சுப பலன்களைப் பெற இந்த பரிகாரங்களை செய்யுங்கள். சந்திரனைப் போலவே, சுக்கிரனும் ஒளிரும் கிரகங்களில் ஒன்றாகும் மற்றும் வெள்ளை நிறத்துடன் வலுவான உறவைக் கொண்டுள்ளது. வெள்ளை உணவுகள், வெள்ளை ஆடைகள், வெள்ளி நகைகள், வைரங்கள் உட்பட வெண்மையான அனைத்து பொருட்களும் சுக்கிரனுக்கு உரியது
சுக்கிரனின் பரிவர்த்தனையின்போது, ஏழைகளுக்கு பால் மற்றும் அரிசி போன்ற வெள்ளைப் பொருட்களை வழங்குவது மற்றும் வெள்ளி மற்றும் சுக்கிரன் தொடர்பான நகைகளால் செய்யப்பட்ட நகைகளை அணிவது போன்றவை, தாக்கத்தைக் குறைக்கும்.
பொதுவாக, விலங்குகளுக்கு உணவு கொடுப்பது, விளக்கு ஏற்றுவது, வெண்ணிற பூக்களை கடவுளுக்கு அணிவித்து பூஜை செய்வது, மற்றும் சுக்கிரனை சாந்திப்படுத்தும் மந்திரங்களைச் சொல்லி வணங்குவது ஆகியவை பொதுவான பரிகாரங்கள் ஆகும்.
மேலும் படிக்க | நவம்பர் மாத ராசிபலன்: இந்த ராசிகள் மீது மாதம் முழுதும் பண மழை, லாபம் பெருகும்
ராசிப்படி பரிகாரம்
மேஷ ராசி: சுக்கிரனின் சுப பலன்களைப் பெற வைரம் அணியலாம்.
ரிஷப ராசி: உங்கள் வசதிக்கு ஏற்ப, வெள்ளிக்கிழமை 11 அல்லது 21 வரை விரதம் இருங்கள்.
மிதுன ராசி: வெள்ளிக்கிழமையன்று மஞ்சள் துணி, அரிசி, சர்க்கரை, வெல்லம் போன்றவற்றை தானம் செய்யுங்கள்.
மேலும் படிக்க | சனியுடன் சந்திரன் இணைந்ததால் ஏற்பட்ட புனர்ப்பு தோஷம்
கடக ராசி: வெள்ளிக்கிழமை, அதிலும் குறிப்பாக மாலையில் லட்சுமியை வணங்கி லட்சுமி ஸ்தோத்திரங்களை சொல்லவும். சுக்ர மந்திரத்தை ஜபிக்கவும்.
சிம்ம ராசி: சுக்கிரன் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தர, வைரம், தங்கம், ஸ்படிகங்களை தானம் செய்து சுக்கிரன் வலுப்பெறவும், சுக்கிரனின் சுப பலன்களைப் பெறவும்.
கன்னி ராசி: பெண்களுக்கு அதிகபட்ச மரியாதை கொடுங்கள் மற்றும் உங்கள் வீட்டை எப்போதும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருங்கள்.
துலா ராசி: குறிப்பாக வெள்ளிக் கிழமைகளில் சிவபெருமானுக்கு வெள்ளைப் பூக்களை அர்ப்பணிக்கவும்.
விருச்சிக ராசி: புளிப்பைச் சாப்பிடக் கூடாது.
தனுசு ராசி : பாசி மாலையை அணியுங்கள்.
மகர ராசி: ஏலக்காயை தண்ணீரில் போட்டு குளிக்கவும்.
கும்ப ராசி: வெள்ளிக்கிழமை எறும்புகளுக்கு மாவு ஊட்டவும்
மீன ராசி: தொடர்ந்து உணவு உண்பதற்கு முன், உங்கள் தட்டில் இருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து ஒரு வெள்ளை பசுவிற்கு உணவளிக்கவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | திருமணத் தடையா? ராகு தோஷமா? ஏழில் ராகுவா? ராகு தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ