சனியுடன் சந்திரன் இணைந்ததால் ஏற்பட்ட புனர்ப்பு தோஷம்... பரிகாரம் செய்தால் சரியாகுமா?

Punarphoo Dhosha: ஒருவரின் ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தாலும், பரிவர்தனை பெற்றாலும், சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி இருந்தாலும், அல்லது சம சப்தம பார்வை பெற்றாலும் புனர்ப்பு யோகம் ஏற்படுகிறது 

Last Updated : Nov 2, 2022, 02:36 PM IST
  • ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் ஏற்படும் தோஷம்
  • புணர்ப்பு தோஷத்தால் ஏற்படும் கெடுபலன்கள்
  • புணர்ப்பு தோஷத்திற்கும் புணர்ப்பு யோகத்திற்கும் என்ன வித்தியாசம்?
சனியுடன் சந்திரன் இணைந்ததால் ஏற்பட்ட புனர்ப்பு தோஷம்... பரிகாரம் செய்தால் சரியாகுமா? title=

புதுடெல்லி: சனீஸ்வரர், ஒருவரின் ஜாதகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவர். சந்திரன், ஒருவரின் மனதை ஆள்பவர். இந்த இரண்டு ஆற்றல் மிக்க ஆக்கபூர்வமான கிரகங்களும் இணைவது புணர்ப்பு யோகம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். பிரபலமானவர்களுக்கு புணர்ப்பு யோகம் இருக்கும். பொதுவாக, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் ஆன்மீகத்தில் ஈடுபட்டு தொண்டு செய்பவர்களுக்கும், சந்திரனும், சனியும் இணைந்திருப்பார்கள் என்று கூறப்படுகிரது.

ஒருவரின் ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தாலும், பரிவர்தனை பெற்றாலும், சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனீஸ்வரர் இருந்தாலும், அல்லது சம சப்தம பார்வை பெற்றாலும் புனர்ப்பு யோகம் ஏற்படுகிறது. நன்மையைக் கொடுக்கும்போது புணர்ப்பு யோகமாக கருதப்படும் சனி-சந்திரன் சேர்க்கை, அசுப பலன்களை கொடுக்கும் ஜாதகருக்கு புணர்ப்பு தோஷமாக மாறிவிடுகிறது. 

மேலும் படிக்க | சனியின் வக்ர நிவர்த்தியும் செவ்வாயின் வக்ர கதியும் இந்த 4 ராசிகளுக்கு அருமை!

புனர்ப்பு தோஷம் உள்ளவர்களுக்கு வாழ்க்கை துணை சரியாக அமையாது. அது காதல் உறவாக இருந்தாலும் சரி, வாழ்க்கைத் துணையாக இருந்தாலும் சரி. இந்த தோஷம் கடுமையாக உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில்லை. திருமணம் நடந்தாலும் மனமுறிவு அல்லது குறைந்தபட்சம் பிரிந்து வாழும் சூழல் ஏற்படுகிறது.

நிம்மதியற்ற வாழ்கையை அனுபவிக்க வேண்டிய நிலை, அல்லது பலருடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற பெயரை புனர்ப்பு தோஷம் ஏற்படுத்துகிறது. புனர்ப்பு தோஷம் கொண்டவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள்.

குடும்பத்தை விட பொதுநலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் புணர்ப்பு யோகம், குடும்ப வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. 

மேலும் படிக்க | வார ராசிபலன்: மிதுனம், தனுசு எச்சரிக்கை! சிம்மத்திற்கு சிறப்பு 

இதுவே, ஒருவரின் ஜாதகத்தில் 4,10,11 ஆகிய வீடுகளில், வலுவான கிரகங்களான, சனியும் சந்திரனும் இணைந்தால், புனர்ப்பு தோஷம், யோகமாகி ராஜயோகம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

புனர்ப்பு ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். முறையாக பரிகாரம் செய்தால் இந்த தோஷத்திலிருந்து விடுபடலாம்.

மேலும் படிக்க | பெயர்ச்சியாகும் புதன் மற்றும் சுக்கிரனால் அடித்தது யோகம்: 4 ராசிகளுக்கு அற்புதம் 

குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவதும், தான தர்மங்கள் செய்வதும் இந்த தோஷத்தின் தாக்கத்தைக் குறைக்கும். பௌர்ணமி நாட்களில் விரதம் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வதும், தானம் அளிப்பதும் திருமணத் தடைகளை நீக்கும்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி மகாதசை ஏழரை சனியின் பாதிப்பு யாருக்கு? சனீஸ்வரரை சாந்தப்படுத்தும் பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News