சுக்கிரன் அருளால் புத்தாண்டின் ஆரம்பமே இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்
Venus Transit in 2023: சுக்கிரனின் பெயர்ச்சிக்கு பிறகு மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. இதன் நேரடி தாக்கம் 3 ராசிகள் மீது இருக்கும். இவர்களுக்கு பல நல்ல பலன்கள், திடீர் பண ஆதாயம் முன்னேற்றம் ஆகியன கிடைக்கும்.
சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மற்றும் நிலை மாற்றங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இதனால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின்படி, சுக்கிரன் கிரகம் 05 பிப்ரவரி 2023 அன்று அது உச்சத்தில் இருக்கும் ராசியான மீனத்தில் கோச்சாரம் செய்யும். இது அனைத்து 12 ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு நல்ல பலன்களும் சிலருக்கு அசுப பலன்களும் கிடைக்கும்.
சுக்கிரன் சஞ்சாரத்தால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்
சுக்கிரன் கிரகம் ஆடம்பரம், செழுமை, உடல்நலம், கலை-இசை மற்றும் திருமண வாழ்க்கை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. 2023 இல் பிப்ரவரி 05 ஆம் தேதி சுக்கிரனின் பெயர்ச்சிக்கு பிறகு மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. இதன் நேரடி தாக்கம் 3 ராசிகள் மீது இருக்கும். இவர்களுக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு திடீர் பண ஆதாயமும் முன்னேற்றமும் கிடைக்கும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்
மிதுன ராசிக்காரர்கள் சுக்கிரன் சஞ்சாரத்திற்குப் பிறகு உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் பெரிய ஆதாயம் அடைவார்கள். இவர்களுக்கு பண ஆதாயத்துடன் புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும். இது தவிர, பணியிடத்தில் பாராட்டும் அதிகமாகும். மேலதிகாரிகளுடன் சுமுகமான உறவு இருக்கும், மகிழ்ச்சியும் கூடும். இது தவிர, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகளும் உள்ளன. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
மேலும் படிக்க | 2023 வருட பலன்: பட்ட கஷ்டம் போதும்... நிம்மதி பெருமூச்சு விடும் தனுசு ராசி!
கன்னி ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்
மாளவ்ய ராஜயோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்ப நலன் மற்றும் நிதி முன்னேற்றம் ஏற்படும். கன்னி ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையிலும் கூட்டாண்மையிலும் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்வில் மகிழ்ச்சியும், திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்பும் கிடைக்கும். இது தவிர, கூட்டாண்மையில் வேலையைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன, இந்த வகையில் வேலை செய்வது நன்மை பயக்கும்.
தனுசு ராசிக்காரர்கள் வாகனம், சொத்துக்களால் மகிழ்ச்சி அடைவார்கள்
புத்தாண்டில் தனுசு ராசிக்காரர்கள் வாகனம் மற்றும் சொத்துக்களால் சுகத்தைப் பெறலாம், ஏனெனில் சுக்கிரனின் சஞ்சாரத்திற்குப் பிறகு உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தில் நல்ல நாட்கள் தொடங்கும். தனுசு ராசிக்காரர்கள் தாயாரின் ஆதரவைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். அதே நேரத்தில் வணிகர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஜனவரி கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளுக்கு ஹை அலர்ட் காலம், எச்சரிக்கை தேவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ