Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வாகும். இவற்றை கிரக பெயர்ச்சிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும், ஆனால் இதனால் சில ராசிக்காரர்களுக்கு சுப விளைவுகளையும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கலையும் ஏற்படுத்தக் கூடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல் திருமண வாழ்க்கை, செல்வச் செழிப்பு, புகழ், கலை, அன்பு, போன்றவற்றை அள்ளித் தரும் சுக்கிரன் பகவான் ரிஷபம் மற்றும் துலா ராசியின் அதிபதி ஆவார். அதேபோல் மீன ராசியில் உச்ச நிலையில் இருக்கும் சுக்கிர பகவான் கன்னி ராசியில் நீச்ச நிலையில் இருப்பார். இந்நிலையில் வருகிற ஏப்ரல் 24ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசியில் பெயர்ச்சியடைய உள்ளார். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.


மேஷம் (Aries Zodiac Sign): சுக்கிரன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சௌபாக்கியத்தை அளிக்க உள்ளது. நீண்ட நாட்களாக தீராமல் இருந்த பிரச்சனைகள் இப்போது தீரும். அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்


சிம்மம் (Leo Zodiac Sign): இந்த காலத்தில் லாபம் இருக்கும். நீங்கள் நினைத்ததை விட பண வரவு அதிகமாக இருக்கும். முதலீடு செய்த இடங்களில் நல்ல லாபம் கிடைக்கும். இதனால் உங்கள் நிதிநிலை வலுப்பெறும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் உறவினர்களுக்கு இடையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகளை சரி செய்ய முயற்சிப்பீர்கள். வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.


மேலும் படிக்க | புதன் பெயர்ச்சியும் லட்சுமி நாராயண யோகமும்... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!


கன்னி (Virgo Zodiac Sign): சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக கன்னி ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் இப்பொழுது தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். பணியிடத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.


விருச்சிகம் (Scorpio Zodiac Sign): திருமணம் ஆகாத விருச்சிக ராசிக்காரர்களுக்கு இப்பொழுது திருமணம் நிச்சயமாகும். குடும்பத்தில் புரிதலும் அன்பும் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். கல்வியில் மாணவர்களுக்கு நாட்டம் அதிகரிக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல காலமாக இருக்கும்.


தனுசு (Sagittarius Zodiac Sign): சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக தனுசு ராசிக்காரர்களுக்கு பல்வேறு திட்டங்களில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.  குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த காலத்தில் நீண்ட பயணத்தை மேற்கொள்வீர்கள். இதன் மூலம் அனுகூலமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இன்னும் 11 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ