)
Gajlaxmi Rajyog 2024: ஜோதிட சாஸ்திரப்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றும். இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தால் பலசுப ராஜயோகங்கள் உருவாகும். இந்த ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலனைத் தரும். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சுக்கிரன் ஏப்ரல் 25 ஆம் தேதி மேஷ ராசியில் நுழைகிறார்.
மேஷ ராசியில் உருவாகிறது கஜலட்சுமி ராஜயோகம் | Gajalakshmi Raj Yoga to be formed in Aries:
வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி நள்ளிரவு 12.07 மணிக்கு செல்வம், செழிப்பு, சுகபோகங்களை அள்ளித் தரக்கூடிய சுக்கிரன் கிரகமானது மேஷ ராசியில் இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். வரும் மே 19 வரை சுக்கிரன் மேஷ ராசியில் தான் பயணிப்பார். மேஷ ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சியானது கஜலட்சுமி ராஜயோகத்தை உருவாகும். இந்த ராஜயோகம் மூன்று ராசிக்காரர்களுக்கு அளவில்லா செல்வத்தை தரக்கக்கூடும், மேலும் செல்வ செழிப்பை உருவாக்கும். எனவே இந்த மூன்று ராசிக்காரர்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
1. மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல சாதகமான பலனைத் தரக்கக்கூடும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கூடலாம். தொழிலதிபர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும், வியாபாரம் விரிவடையும். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும். சுப காரியத்தை செய்வீர்கள். பெற்றோரின் ஆசிர்வாதத்தைப் பெறுவீர்கள். திருமணமானவர்களின் வாழ்வில் இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.
2. மகரம் (Capricorn Zodiac Sign): மேஷ ராசியில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன் தரக்கூடும். இந்த நேரத்தில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை பெறுவீர்கள். அன்னை லட்சுமியின் அருள் நிலைத்திருக்கும், இது பொருளாதார பிரச்சனைகளை நீக்கஉதவும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகி பொருளாதார நிலை முன்பை விட மேம்படும். சுக்கிர பகவான் மூலம் சுகங்களையும் வசதிகளையும் பெருகும். பணியிடத்தில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும், இதன் மூலம் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரன்கள் வரலாம்.
3. கும்பம் (Aquarius Zodiac Sign): கும்பம் ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி ராஜயோகத்தால் அதிக பலன்கள் கிடைக்கும். செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியின் ஆசிகள் உங்கள் மீது நிலைத்திருக்கும். நிலுவையில் உள்ள பணத்தை நீங்கள் இந்தான் நேரத்தில் திரும்பப் பெறலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பளம் உயரும் வாய்ப்புகள் அதிகம். எதிர்பாராத நிதி ஆதாயம் உண்டாகும், இதன் காரணமாக நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை மேம்படும் மற்றும் உங்கள் துணையின் முழுமையான ஆதரவை நீங்கள் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ