சுக்கிரன் ராகு சேர்க்கை: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான், டாப் கிளாஸ் பலன்கள் கிடைக்கும்
Venus Rahu Conjunction: ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
Venus Rahu Conjunction: ஜோதிட சாஸ்திரத்தில் கிரக பெயர்ச்சிகள் மிக முக்கியமான ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. இவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கிரகங்கள் பெயர்ச்சியாகும் போது சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படுகின்றது. இந்த கிரக சேர்க்கைகளால் ராஜயோகங்கள் உருவாகின்றன.
சுக்கிரன் பண வரவு, சுகம், மகிழ்ச்சி, வசதிகள், பேச்சாற்றல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சுக்கிரன் பெயர்ச்சியாகும் போது மனித வாழ்க்கையின் இந்த அம்சங்களில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மார்ச் 31ஆம் தேதி மீன ராசியில் அவர் பெயர்ச்சியாக உள்ளார். மீனத்தில் ஏற்கனவே ராகு உள்ளார். இந்த நிலையில் மீனத்தில் ராகு மற்றும் சுக்ரனின் சேர்க்கை நடக்கவுள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி மார்ச் 31 அன்று மாலை 4:31 மணிக்கு சுக்கிரன் மீன ராசியில் பெயர்ச்சி ஆவார். ஏப்ரல் 24 ஆம் தேதி வரை அவர் இந்த ராசியிலேயே இருப்பார். அதன் பிறகு மேஷத்தில் பெயர்ச்சி ஆவார். மேஷத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் நிறைவடையும். பண பலம் அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
கடகம் (Cancer)
கடக ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நல்ல பலன்களை அளிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்பொழுது நடந்து முடியும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வேலையை மாற்றும் எண்ணத்தில் இருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். பண வரவிற்கான சாதகமான நிலை ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கும் இப்பொழுது வேலை கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள்.
மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி... 12 ராசிக்கான பலன்கள்... அதிர்ஷ்ட ராசிகள் எவை..!
விருச்சிகம் (Scorpio)
ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சுபச் செய்திகளை பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். வாழ்க்கத் துணையுடன் அன்பு அதிகரிக்கும். வாழ்க்கையில் எந்தவித இன்னல்களையும் சந்திக்க நேரிடாது. உங்கள் எதிர்காலத்திற்கான திட்டமிடலை நன்றாக செய்வீர்கள். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். விருச்சிக ராசி மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்
கன்னி (Virgo)
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை அனுகூலமான பலன்களை அளிக்கும். புதிய திட்டங்களை தொடங்கி வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய திட்டங்கள் மூலமாக அதிக லாபம் காணலாம். வீடு, வாகனம் வாங்க வாய்ப்புள்ளது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் ஆளுமை மற்றவர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ