இனி இந்த ராசிகளின் வாழ்க்கை களைகட்டும், செல்வம் பெருகும்: உதய சனி அருள் மழை பொழிவார்
Sani peyarchi Palangal: சனி உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் மிக நல்ல பலன்கள் கிடைக்க உள்ளன.
Sani peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுவதாக ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் கிரகப்பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. கிரகங்கள் மேற்கொள்ளும் பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது.
12 ராசிகளில் மிக முக்கியமான கிராமமாக கருதப்படுபவர் சனி பகவான். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப இவர் பலன்களை அளிப்பதால் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி பகவான் ஒரே ராசியில் அதிக காலத்திற்கு இருப்பதால் இவரது தாக்கம் ராசிகளில் அதிகமாக இருக்கின்றது. சனி பகவான் உட்பட அனைத்து கிரகங்களும் ராசி மாற்றங்களை தவிர நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்கிரப் பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என இன்னும் பலவிதமான மாற்றங்களை மேற்கொள்கின்றன. மார்ச் 18 ஆம் தேதி கும்ப ராசியில் சனி உதயமானார்.
சனி உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் மிக நல்ல பலன்கள் கிடைக்க உள்ளன. இவர்கள் எடுக்கும் அனைத்து பணிகளிலும் இந்த காலத்தில் வெற்றி பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகமாகும். நிதிநிலை நன்றாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodaic Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries)
சனி உதயம் ஆகியுள்ள இந்த நிலையில் மேஷ ராசிக்காரர்களுக்கு இதனால் அதிகப்படியான லாபம் கிடைக்கும். இந்த காலத்தில் நிதிநிலை நன்றாக இருக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு இருக்கும். பணம் ஈட்டுவதற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளால் மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். இதன் காரணமாக ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் வந்த சங்கடங்கள் இப்பொழுது நீங்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் புரிதம் அதிகமாகும். குடும்பத்தாரின் முழுமையான ஆதரவும் அன்பும் கிடைக்கும். மேஷ ராசியில் உள்ள மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகமாகும்.
மேலும் படிக்க | மீனத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள், குபேர யோகம் ஆரம்பம்
ரிஷபம் (Taurus)
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி உதயம் பலவித நல்ல பலன்களை கொண்டு வரும். இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடின உழைப்பிற்கான முழுமையான பலன்கள் கிடைக்கும். பணி நிமித்தமாக நீங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணத்தால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகமாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை சுகமாக இருக்கும். பணியிடத்தில் மாற்றத்திற்கான வாய்ப்புகளும் உள்ளன. சனி உதயத்தால் உங்களுக்கு நல்லது நடக்கும்.
கன்னி (virgo)
சனி உதயம் கன்னி ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். சட்ட சிக்கல்களில் உங்களுக்கு அனுகூலமான தீர்வு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இத்தனை நாட்களாக வாட்டி வதைத்து வந்த நோய்கள் இப்போது குணமாகும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். இந்த காலத்தில் நீங்கள் செய்யும் கடின உழைப்பால் எதிர்காலத்தில் நன்மைகள் கிடைக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் லாபம் பெறலாம். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Sun Transit 2024: சூரியபெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ