மீனத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள், குபேர யோகம் ஆரம்பம்

Sevvai Peyarchi Palangal: செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளுக்கு இதனால் நல்ல பலன்கள் கிடைக்கும். சில ராசிகள் பிரச்சனைகளை சந்திக்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 26, 2024, 11:51 AM IST
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் பெயர்ச்சி அற்புதமான பலன்களை கொண்டு வரும்.
  • உங்கள் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
  • திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள், குபேர யோகம் ஆரம்பம் title=

Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றங்கள் பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன  அனைத்து கிரகங்களுக்கும் தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன. இந்த பெயர்ச்சிகளால் சில ராசிகளுக்கு நல்ல பலன்களும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் உருவாகும்.

வீடு, மனை, நிலம், ஆற்றல், தைரியம், அறிவாற்றல், பேச்சாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருக்கும் செவ்வாய் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் மாதத்தில் மீன ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளுக்கு இதனால் நல்ல பலன்கள் கிடைக்கும். சில ராசிகள் பிரச்சனைகளை சந்திக்கலாம். எனினும் சில ராசிக்காரர்கள் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான நல்ல பலன்களை அடைவார்கள். இவர்கள் வாழ்க்கையில் வெற்றியின் உச்சம் தொடுவார்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodaic Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். பணியிடத்திலும் வியாபாரத்திலும் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த முன்னேற்றம் இப்பொழுது கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலையில் இருந்த சிக்கல்கள் இப்பொழுது தீர்ந்து நிதிநிலை வலுவாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். விளையாட்டு, காவல் துறை, ராணுவம், மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலம் பொற்காலம் போன்றது. பலவித வெற்றிகள் வந்து குவியும். இப்போது தொடங்கப்படும் பணிகளால் லாபம் உண்டாகும். இப்போது செய்யப்படும் முதலீடுகள் மூலம் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

மேலும் படிக்க | Sun Transit 2024: சூரியபெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம்!

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். சட்ட சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அவை இப்பொழுது தீர்ந்துவிடும். இந்த காலத்தில் பிற ஊர்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் உருவாகும். ஆன்மீகப் பணிகளில் பங்கேற்பீர்கள். அதில் நாட்டம் அதிகரிக்கும். அரசாங்க திட்டங்களால் பலன் பெறுவீர்கள்.

விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் பெயர்ச்சி அற்புதமான பலன்களை கொண்டு வரும். உங்கள் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான புரிதலும் அன்பும் மேலோங்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்போது உங்களிடம் வந்து சேரும். இதனால் உங்கள் நிதிநிலை மேன்மை அடையும். திருமணத்திற்காக காத்திருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்பொழுது திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு தொல்லைகள் தீரும், நல்ல காலம் ஆரம்பமாகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News