Guru Udhayam Palangal: ஜோதிட சாச்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ராசிகளை தவிர கிரகங்களின் நட்சத்திரம், உதய, அஸ்தம நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் கானப்படுகின்றன. சில ராசிகளில் இவற்றால் சுப விளைவுகளும் சில ராசிகளில் அசுப விளைவுகளும் ஏற்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 அறிவு, செல்வம், திருமணம், குழந்தைகள் போன்ற காரணிகளின் அதிபதியாக இருப்பவர் குரு பகவான். குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. குரு பகவான் இந்த மாதம் 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். மே 7, 2024 அன்று ரிஷபத்தில் அஸ்தமித்த குரு, இப்போது ஜூன் 6, 2024 ஆம் தேதி ரிஷப ராசியிலேயே உதயமாகவுள்ளார். 


குரு பகவான், ஜூன் 6, 2024 அன்று, அதிகாலை 04.36 மணிக்கு உதயமாவார். குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். பொருளாதார நிலை மேம்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 


ரிஷபம் (Taurus)


குரு பகவான் தற்போது ரிஷப ராசியில்தான் உள்ளார். அவர் தனது சொந்த ராசியில் உதயமாகப் போகிறார். இதனால் ரிஷப ராசிக்காரர்கள் அதிகமான பலன்களை பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு சம்பள உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். பணியிடத்தில் பணி தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். 


கடகம் (Cancer)


கடக ராசிக்காரர்களுக்கு குரு உதயம் சுப பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்போது திரும்ப வந்து சேரும். இப்போது முதலீடு செய்ய நல்ல காலம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காபத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முன்னர் செய்த முதலீடுகளின் பலன்கள் இப்போது கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அன்னை லட்சுமியின் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். 


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான அதிர்ஷ்டம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்


சிம்மம் (Leo)


சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு உதயம் மற்றும் குரு பெயர்ச்சியால் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணி இடத்தில் மேல் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் உதவியாக இருபார்கள். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புதிய நபர்களுடன் தொடர்பு கொண்டு எதிர்காலத்தில் நன்மைகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம்.  செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மி அன்னையின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கும். 


விருச்சிகம் (Scorpio)


விருச்சிக ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி மற்றும் குரு உதயம் சிறப்பான பலன்களை அளிக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் இப்போது நடந்து முடியும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்த திட்டமிடலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் வெளிநாட்டு பயணமும் செல்ல வாய்ப்புள்ளது. 


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  


மேலும் படிக்க | மே 31க்கு பிறகு இந்த 4 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ