சனி பகவானின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றும் என்றால், ஜூன் மாதத்தில் இந்த இரண்டு தினங்களில் வழிபாடு செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் அதுகுறித்து இங்கு காணலாம்.
சனி பகவானின் தாக்கம் இருந்தால் வாழ்வில் துர்சம்பவங்கள் ஏற்படலாம். பண நஷ்டம், தொழிலில் பாதிப்பு ஆகிய பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.
சனி பகவான் என்பவர் நீதி கடவுளாக பார்க்கப்படுகிறார். நீங்கள் செய்ய வினையின் பலனை உங்களுக்கு அளிப்பவர். அது நன்மையாக இருந்தால் நல்ல பலன் வரும், தீமையாக இருந்தால் அசுபமாக மாறும்.
எனவே, ஒருவரின் ஜாதகத்தில் சனியின் பார்வை எப்படி இருக்கிறது என்பதை பார்த்துதான் அவர்கள் தங்கள் வாழ்வின் அந்த கட்டத்தின் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.
ஒருவேளை ஒருவரின் ஜாதகத்தில் சனி பார்வை அசுபமாக இருக்கும்பட்சத்தில் அவருக்கு பணப் பிரச்னை வரும், சமூகத்தில் மரியாதை குறையும்... ஏன் அவர் ஏழையாகி நடுத்தெருவுக்கு வருவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது.
அந்த வகையில், சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமென்றால் சனி பகவானை நோக்கி வழிபாடு செய்தால், அதன் தாக்கம் குறையும் என நம்பப்படுகிறது. பரிகாரம் செய்வதன் மூலம் சனியின் தாக்கத்தை நீங்கள் குறைக்கலாம்.
குறிப்பாக, சனி பகவானுக்கு உகந்த நாளில் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்தால் பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் வரும் ஜூன் மாதத்தில் சனி பகவானுக்கு உகந்த இரண்டே நாள்கள் மட்டுமே உள்ளன. அந்த நாள்களை மறக்காமல் குறித்துவைத்துக் கொண்டு அன்றைய தினம் சனி பகவானை நோக்கி வழிபாடு செய்யுங்கள்.
வரும் ஜூன் 6ஆம் தேதி சனி ஜெயந்தி ஆகும். அன்றைய தினம் சனி பகவானுக்கு உகந்த தினம். மேலும், ஜூன் 29ஆம் தேதி சனி வக்ர பெயர்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினமும் சனி பகவானை வழிபடுவதற்கு உகந்த நாளாகும்.
இந்த இரண்டு நாள்களிலும் சனி பகவானை நோக்கி வழிபாடு செய்தால் நிச்சயம் அதன் அசுப தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. அன்றைய தினம் சனி பகவானுக்கு மாலையில் அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றி, அரச மரத்தின் முன் கடுகு எண்ணெயில் விளக்கேற்றி, மரத்தை 7 முறை சுற்றி வந்து வழிபாடு செய்தால் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். மேலும், ஏழைகளுக்கு மாலைப் பொழுதில் கருப்பு ஆடை, எள் ஆகியவற்றை தானம் அளிப்பது கூடுதல் பலனை கொடுக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் உள்ளன. இதனை ஜீ நியூஸ் - ZEE NEWS உறுதிப்படுத்தவில்லை.