ஜோதிட சாஸ்திரப்படி ஜூலை மாதத்தில் ஐந்து கிரகங்களின் ராசியில் மாற்றம் ஏற்படும். இதில் புதன் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிரகங்களின் அதிபதியான புதன் பேச்சு, புத்திசாலித்தனம் மற்றும் வியாபாரத்தின் காரணியாகக் கருதப்படுகிறது. அதன்படி ஒருவரின் ஜாதகத்தில் புதன் கிரகம் சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபர் முன்னேற்றமும் வெற்றியும் பெறுவார்கள். எனவே ஜூலை மாதத்தில், புதன் கிரகம் மூன்று முறை ராசியை மாற்றும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் புதன் பெயர்ச்சி 12 ராசிகளையும் பாதிக்கும். புதன் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலனையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது புதனின் ராசி மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் உண்டாக்கித் தரப்போகிறது என்பதை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்-


மேலும் படிக்க | ஜூலை மாதம் எப்படி இருக்கும்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்


ஜூலை 2022ல் புதன் எப்போது ராசியை மாறும்-


புதன் பகவான் ஜூலை 2 ஆம் தேதி காலை 09:52 மணிக்கு தனது முதல் ராசி மாற்றத்தை செய்துள்ளார். இந்த நேரத்தில் புதன் மிதுன ராசியில் அமர்ந்துள்ளார். இரண்டாவது ராசி மாற்றம் ஜூலை மாதம் 17 ஆம் தேதி அன்று நடைபெறும். அதன்படி வருகிற ஜூலை 17 ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்கு இந்த மாற்றம் இருக்கும். அதேபோல் ஜூலை 17 ஆம் தேதியில் புதன் கிரகம் கடக ராசிக்குள் நுழைவார். இதன்பிறகு ஜூலை 31 ஆம் தேதி புதன் கிரகம் ராசி மாறுகிறார். இந்த நேரத்தில் புதன் கிரகம் கடகத்தை விட்டு சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகுவார்.


புதன் கிரகம் மூன்று முறை ராசியை மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு புதன் தேவரின் சிறப்பு ஆசீர்வாதம் கிடைக்கும்.


சிம்மம் - புதன் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் கூடும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். மனைவி மாறுக்கு முழு ஆதரவு கிடைக்கும்.


கன்னி- கன்னி ராசிக்காரர்களின் வாழ்வில் புதன் கிரகம் மகிழ்ச்சியை பரிசாக தருவார். இந்த காலகட்டத்தில் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளும் வரலாம். வியாபாரத்தில் லாபம் அடைவார்கள்.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு சொத்துக்களில் லாபம் கிடைக்கும். தொழிலில் பதவி உயர்வு கூடும். பணி நடை பாராட்டப்படும். மரியாதை அதிகரிப்பு சாத்தியமாகும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளதன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Monthly Horoscope: ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும், எச்சரிக்கை தேவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR