ஜூலை மாதம் எப்படி இருக்கும்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்

July Horoscope 2022: ஜூலை மாத ராசிபலன்; சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 1, 2022, 06:24 AM IST
  • ராசிபலன் 1 ஜூலை 2022.
  • தன்னம்பிக்கை அதிர்காரிக்கும்.
  • கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும்.
ஜூலை மாதம் எப்படி இருக்கும்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம் title=

ஜூலை மாத ராசிபலன் 2022: ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ராசியை மாற்றுகிறது. ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றமும் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜூலை மாதத்திலும் 5 பெரிய கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றுகின்றன. அதன்படி ஜூலை 2 ஆம் தேதி, புதன் கிரகம் மிதுன ராசியில் நுழைகிறது. இதைத் தொடர்ந்து சூரிய பகவான் ஜூலை 16 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார். இதனுடன் செவ்வாய் மற்றும் சுக்கிரனும் ஜூலை மாதத்தில் மாறுவார்கள். கிரகங்களின் நிலை மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்களும், அபரிமிதமான லாபமும் கிடைக்கவுள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம் - இந்த மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சமய காரியங்கள் நடைபெறலாம். செலவுகள் அதிகமாக இருக்கும். உரையாடலின் போது பொறுமையாக இருங்கள். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் மாற்றம் சாத்தியமாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மேலும் படிக்க | குருவின் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி பொங்கும்

ரிஷபம் - மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உரையாடலில் பொறுமை தேவை. எழுத்து-அறிவு சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கல்விப் பணிகளில் மகிழ்ச்சியான முடிவுகள் கிடைக்கும். பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் அமையும். கடின உழைப்பு அதிகம் இருக்கும். வருமான நிலை மேம்படும். உயர் பதவி பெறலாம். பணியிடத்தில் போராட்டங்கள் வரலாம்.

மிதுனம் - மிதுன ராசியினருக்கு பேச்சில் இனிமை இருக்கும், குடும்பத்தில் நல்லிணக்கத்தைப் பேணுங்கள். கல்விப் பணிகளில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் வருமானம் அதிகரிக்கும். அதிகப்படியான செலவுகளால் சிரமப்படுவீர்கள். பணியிடத்தில் சிரமங்கள் ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும்.

கடகம் - மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். நம்பிக்கை அதிகாரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்ற பாதை அமையும். ஆட்சி நிர்வாகத்தில் இருந்து உதவி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வயதான குடும்ப உறுப்பினர் மூலம் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சிம்மம் - இந்த மாதம் தன்னடக்கத்துடன் இருங்கள். குடும்பத்துடன் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் திட்டத்தை உருவாக்கலாம். அதிக ஓட்டம் இருக்கும். தாயாருக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். மனதில் விரக்தி மற்றும் அதிருப்தி உணர்வுகள் இருக்கும். நண்பரின் ஆதரவைப் பெறுவீர்கள். 

கன்னி - மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இருப்பினும், உரையாடலில் பொறுமை தேவை. உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வருமானம் அதிகரிக்கும். மரியாதை கூடும். நண்பர்களை சந்திப்பீர்கள். நம்பிக்கை மிகுதியாக இருக்கும். மன நிம்மதி ஏற்படும். ஆடைச் செலவுகள் அதிகரிக்கும். தாயிடமிருந்து பண உதவி கிடைக்கும். முன்னேற்றப் பாதை அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

துலாம் - கோபத்தைத் தவிர்க்கவும். தொழிலில் மாற்றங்கள் ஏற்படும். நண்பரின் உதவியைப் பெறலாம். வேலை சுமை அதிகமாக இருக்கும். நம்பிக்கை குறைவு ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வரலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். 

விருச்சிகம் - மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆடைகள் மீதான நாட்டம் அதிகரிக்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். செலவுகள் கூடும். குடும்பத்தின் பெரியவரிடமிருந்து பணம் பெறலாம். குவிந்த செல்வம் பெருகும். தேவையற்ற சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்.

தனுசு - தன்னம்பிக்கை அதிர்காரிக்கும். அதீத ஆர்வத்தை தவிர்க்கவும். கல்விப் பணிகளில் மகிழ்ச்சியான முடிவுகள் இருக்கும். இனிப்பு உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சமய இசையில் ஆர்வம் கூடும். 

மகரம் - வியாபாரம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் சாதகமாக அமையும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். மனதில் எதிர்மறை எண்ணம் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள். 

கும்பம் - கோபத்தைத் தவிர்க்கவும். வாகன சுகம் கூடும். தாயின் ஆதரவைப் பெறுவீர்கள். நம்பிக்கை குறையும். சமய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தைக்கு உடல்நலக் குறைபாடுகள் வரலாம். பணியிடத்தில் பாதகமான சூழ்நிலைகள் இருக்கலாம். 

மீனம் - கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். பணியிடத்தில் வெற்றி உண்டாகும். மரியாதை கூடும். பயணச் செலவுகள் அதிகரிக்கலாம். மனதில் விரக்தி மற்றும் அதிருப்தி உணர்வுகள் இருக்கும். கல்விப் பணிகளில் மகிழ்ச்சியான முடிவுகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வருமான நிலை மேம்படும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சுக்கிரன் இந்த பாவகத்தில் இருந்தால் அரசு வேலை கட்டாயம் பெறும் ராசிக்காரர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News