Guru Asta 2023: குரு மற்றும் சுக்கிரனின் நட்சத்திரங்களின் அஸ்தமனம் போது எந்த ஒரு சுப காரியமும் நடைபெறாது. மார்ச் 28, 2023 அன்று, தேவ குரு காலை 9.20 மணிக்கு மீனத்தில் அஸ்தமிக்கிறது. குரு மறைந்த பிறகு 7 ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷப ராசி: பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படலாம். உங்கள் செலவுகள் அதிகரிக்கும். அதனால் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். பெரிய முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்மறையான விளைவுகளையும் காணலாம்.


மேலும் படிக்க | புதன் பெயர்ச்சியால் உருவகும் நீச்சபங்க ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்


மிதுன ராசி: வேலை அல்லது பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும். மேலதிகாரி அல்லது மூத்த சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். எதிரிகள் உங்கள் நன்மதிப்பைக் கெடுக்க முயற்சிப்பார்கள். உங்கள் வருமானத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம்.


கடக ராசி: அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. தந்தை அல்லது மூத்த அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் பேச்சால் மக்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். தவறான வார்த்தைகளாலும் சர்ச்சைகளில் சிக்கலாம். பயணங்களால் நஷ்டம் ஏற்படும்.


கன்னி ராசி: கூட்டுத் தொழிலில் நஷ்டம் வரலாம். உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு கெட்டுப்போகலாம். உங்கள் இருவருக்கும் இடையே தவறான புரிதல்கள் வரலாம். உங்கள் செலவுகள் அதிகரிக்கும்.


விருச்சிக ராசி: உங்கள் சிந்தனையை எதிர்மறையாக மாற்றும். பணியிடத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். குழந்தைகள் மற்றும் மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களின் நிதி நிலை பாதிக்கப்படலாம்.
 
தனுசு ராசி: தாயின் உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டும். பணியிடத்திலும் நீங்கள் சவால்களை சந்திக்க நேரிடும். தொலைதூரப் பயணங்களில் சிரமங்கள் ஏற்படலாம். உங்கள் பணம் எங்காவது சிக்கிக்கொள்ளலாம், எனவே புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.
 
மீன ராசி: உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். மனைவியுடனான உறவும் பாதிக்கப்படலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ