கஜகேசரி யோகத்தினால் ஆண்டு முழுவதும் அபரிமிதமான செல்வம் பெறும் ‘சில’ ராசிகள்!

கஜகேசரி யோகம் சிறந்த முறையில் அமைந்து விட்டால், அவருக்கு அட்சய பாத்திரமே கிடைத்து போல எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த யோகத்தினால் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் செல்வம், புகழ், நீண்ட ஆயுள், மக்கள் செல்வாக்குப் போன்றவை வந்து சேரும். அதோடு, இந்த யோகம் உள்ள நபருக்கு, எதிரிகளால் கூட எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 22, 2023, 03:04 PM IST
  • எதிரிகளால் கூட எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.
  • செல்வம், புகழ், நீண்ட ஆயுள், மக்கள் செல்வாக்குப் போன்றவை வந்து சேரும்.
  • அனைத்து வேலைகளிலும் முழுமையான வெற்றியைப் பெறுவீர்கள்.
கஜகேசரி யோகத்தினால் ஆண்டு முழுவதும் அபரிமிதமான செல்வம் பெறும் ‘சில’ ராசிகள்!

 

கஜகேசரி யோகம் ஒருவரது ஜாதகத்தில் 1, 4, 7, 10ம் கட்டங்களாகிய கேந்திர வீடுகளில் குருவும், சந்திரனும் இருந்தால் அவருக்கு கஜகேசரி யோகம் இருப்பதாகப் பொருள். மேலும் சந்திரன் குருவுடன் சேர்ந்து இருப்பது, சந்திரனை குரு பார்ப்பது ஆகிய நிலைகளிலும் கஜ கேசரி யோகம் அமைகிறது. கஜம் என்றால் யானை. கேசரி என்றால் சிங்கம். கஜகேசரி யோகம் இருந்தால், யானையைப் போல பலசாலிகளாகவும் சிங்கத்தைப் போன்ற எதையும் கண்டு அஞ்சாத உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பர் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

கஜகேசரி யோகம் சிறந்த முறையில் அமைந்து விட்டால், அவருக்கு அட்சய பாத்திரமே கிடைத்து போல எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த யோகத்தினால் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் செல்வம், புகழ், நீண்ட ஆயுள், மக்கள் செல்வாக்குப் போன்றவை வந்து சேரும். அதோடு, இந்த யோகம் உள்ள நபருக்கு, எதிரிகளால் கூட எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. 

தற்போது சனியும் குருவும் தங்கள் சொந்த ராசியில் அமர்ந்திருக்கிறார்கள். செவ்வாய், கேது இருவருடனும் சனியின் நவபஞ்சம் ராஜயோகம் உருவாகி வருகிறது. மீனத்தில் சூரியனும், புதனும் இணைவதால் புத்தாதித்ய யோகம் உருவாகி வருகிறது. மேலும் வியாழன் மற்றும் சந்திரன் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகிறது. அப்படிப்பட்ட நிலையில் இந்த 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள்.
 
கஜ கேசரி யோகத்தினால் பலன் பெறும் ராசிகள்

ரிஷபம்

 ரிஷப ராசிக்கு கஜகேசரி ராஜயோகத்தினால் பணப் பலன்கள் எதிர்பாராத அளவில் கிடைக்கும். கிரகங்களின் நிலை உங்கள் நிதி நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். பண பிரச்சனைகள் நீங்கள் பொருளாதாரம் வலுப்படும்.  இன்னும் ஒரு வருட காலத்திற்கு உங்களை அசைத்துக் கொள்ள முடியாது. நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் சாதகமானது. இந்த காலகட்டத்தில், நீங்கள் அனைத்து வேலைகளிலும் முழுமையான வெற்றியைப் பெறுவீர்கள். அதே நேரத்தில், பணியிடத்தில் உங்கள் பணி மிகவும் பாராட்டப்படும். இதன் போது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.

துலாம்

கஜகேசரி ராஜயோகத்தினால் துலாம் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இது மட்டுமின்றி, உங்கள் நிதி நிலையிலும் மிகப்பெரிய பலம் இருக்கும். பண நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். அதுமட்டுமின்றி, முக்கியமான இலக்குகளை அடைவதிலும் வெற்றி பெறுவீர்கள். கிரக நிலை காரணமாக இதுவரை நலிவடைந்து வந்த வேலைகளும் வெற்றியை அடையும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். உயர்கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். அதுமட்டுமின்றி கல்வித்துறையில் முன்னேற்றமும் மரியாதையும் ஏற்படும். குறிப்பாக வரும் ஓராண்டு காலம் உங்களுக்கு மிக சிறப்பாக இருக்கும்

மீனம்

கஜகேசரி ராஜயோகம் மீன ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் சாதகமாக இருக்கும். கிரகங்களின் நிலை உங்கள் புகழ், பெயர், கவுரவம் சுயமரியாதையை அதிகரிக்கும். இலக்கை அடைவதில் வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் செலவுகள் சற்று அதிகரிக்கலாம். ஆனால் வருமான ஆதாரங்களில் இருந்து பணம் வந்து கொண்டே இருக்கும். அதனால், செலவுகள் உங்களை பாதிக்காது. அரசு வேலைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல செய்தி கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Chaitra Navratri 2023: சைத்ர நவராத்திரியில் இப்படி வழிபட்டால் துர்கை அருள் பொழிவாள்..! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News