இந்து மதத்தில் நவராத்திரிக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு.  அன்னை சக்தியின் ஒன்பது வடிவங்கள் ஒன்பது நாட்களில் வழிபடப்படுகின்றன. நவராத்திரிகளில், பங்குனி மாதம் வரும் ‘லலிதா நவராத்திரி' வசந்த நவராத்திரி என்றும் சைத்ர நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வசந்த காலமான இளவேனிற் காலம் பங்குனி அமாவாசைக்கு மறுநாள் முதல் தொடங்குகிறது. அம்பிகையை வழிபாடு செய்யச் சிறந்த காலமான வசந்த நவராத்திரியின் கடைசி நாள் ராம நவமி , ராமர் பிறந்த நாள் என்பதால், சைத்ர நவராத்திரிக்கு ராம நவராத்திரி என்றும் பெயர் உண்டு.


நவராத்திரி கொண்டாடப்படும் காலம் பருவகால மாற்றங்கள் ஏற்படும் காலமாக இருப்பதால், இந்த இரண்டு நவராத்திரியின் காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமானவை என்று கூறப்படுகிறது. கோடை, குளிர் என பருவகாலம் மாறும் போது நோய்நொடிகள் பரவும் என்பதால், மக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து மக்களைக் காக்கும்படி அன்னை சக்தியை பூஜிப்பதற்காக நவராத்திரி விழா அனுசரிக்கப்படுகிறது. 


மேலும் படிக்க | சூரிய பகவானுக்கு பிடித்த ராசிகள்: எப்போதும் வெற்றி, செழிப்பு, புகழுடன் இருக்கும் அதிர்ஷ்டசாலிகள்


புராணங்களின்படி, நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும் செய்து பலன் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ராமரே, நாரதர் அறிவுரைப்படி நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல, சியமந்தக மணி காரணமாக கண்ணபிரானுக்கு ஏற்பட்ட தோஷம், நவராத்திரி பூஜை செய்ததால் நீங்கியது என்றும், பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் சைத்ர நவராத்திரியில் பூஜை செய்ததால்தான் என்றும் கூறப்படுகிறது. 


தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என்பது தேவி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ள விஷயம் ஆகும். நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம்.  


சைத்ரா நவராத்திரியில் இந்து புத்தாண்டு தொடங்குவதாக வட இந்தியாவில் நம்பப்படுகிறது.  இந்த ஆண்டு சைத்ரா நவராத்திரி ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி ராம நவமி நாளில் முடிவடைகிறது. 


இம்முறை சைத்ர நவராத்திரி ஏப்ரல் 9ஆம் தேதி செவ்வாய்கிழமை தொடங்குகிறது. இதனால் துர்க்கை அம்மனின் வருகைக்கான வாகனம் குதிரையாக இருக்கும். நம்பிக்கைகளின்படி, நவராத்திரியில் அன்னை குதிரையில் வரும்போதெல்லாம் அது சுப பலன்களைத் தராது. இது சமூகத்திலும் அரசியலிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதோடு, இயற்கை பேரழிவுகள், விபத்துக்கள், சண்டைகள் மற்றும் மன அழுத்தம் ஏற்படும் என்பதையும் குறிக்கிறது.


மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்


எனவே, இந்த நவராத்திரியில் துர்கா தேவியை வழிபடும் பக்தர்களுக்கு, வினைகளும் பிரச்னைகளும் நீங்கும். 


இந்த ஆண்டு சைத்ர நவராத்திரியில் கலச ஸ்தாபனத்தின் சுப நேரம் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 06:11 முதல் 10:23 வரை இருக்கும். இந்த நேரத்தில், துர்க்கை அன்னையை பக்தியுடன் பிரார்த்தனை செய்வது வாழ்க்கையில் அளவற்ற மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும். மேலும் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும்.


அதேபோல, இந்த ஆண்டு ராம நவமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ஜனவரி 22 ஆம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு வரும் ராம நவமி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் என்பதால், இந்த ஆண்டு ராமநவமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். 


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)


மேலும் படிக்க | 54 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் முழு சூரிய கிரகணம்! இந்த 3 ராசிகளின் தலைவிதி மாறும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ