Venus And Mercury Conjuction Predictions: சுக்கிரன் ஜனவரி 18 ஆம் தேதி தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். அவர் இங்கு பெயர்ச்சி ஆனவுடன் ஏற்கனவே தனுசு ராசியில் இருக்கும் புதனுடன் இணைவார். இதன் காரணமாக சுப பலன்கள் உருவாகும். செல்வத்துக்கு அதிபதியான சுக்கிரனும், ஞானக்காரகரான புதனும் இணைவதால் லக்ஷ்மி நாராயண யோகம் உண்டாகும். அது  மட்டுமல்ல, மேஷத்தில் இருக்கும் குரு பகவானின் பார்வை சுக்கிரன் மீது இருக்கும் என்பதால், இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் என தனித்துவமான குணநலன்கள், பலன்கள் தரக்கூடிய விஷயங்கள் உள்ளன. சுப கிரகங்கள், அசுப கிரகங்கள் என நவகிரகங்கள் பிரிக்கப்பட்டாலும், ஒரு கிரகம் முழுமையாக நன்மைகளையோ, முழுவதுமாக தீங்கு விளைவிக்கும் பலன்களையோ தராது. 


சுக்கிரன் ஆற்றல், அழகு மற்றும் அன்பின் காரணியாக கருதப்படுகிறார். ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், அந்த ஜாதகக்காரரின் வாழ்க்கையில் திருப்தியும், ஆரோக்கியமும், அழகும் அறிவுடன் கூடிய செயல்பாடுகளும் இயல்பாக இருக்கும்.


நவக்கிரகங்களில் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் சுக்கிரனுடன் இணைந்தால் பலன்கள் சுபமானதாக இருக்கும்.  இப்படி இரு சுப கிரகங்களின் இணைப்பு, லஷ்மி நாராயண யோகம் (Lakshmi Narayan Yog) என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் சுபமான யோகமாக கருதப்படுகின்றது.


மேலும் படிக்க | இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது? ஆன்மிகம் கூறும் பதில் இதுதான்!


ஜனவரி 18 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசியில் மாறவுள்ளார். அங்கு ஏற்கனவே புதனும் இருப்பார். புதனும் சுக்கிரனும் இணைவது பல சுப யோகங்களையும் சுப பலன்களையும் உருவாக்கும். இந்த யோகம் உருவாவதால், செழுமை, பண ஆதாயம், வெற்றி, முன்னேற்றம் ஆகியவை ஏற்படும். 


இந்த சுப யோகத்தின் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு மத்திம பலன்கள், சில ராசியினருக்கு அபரிமிதமான நற்பலன்களும் ஏற்படும். இதில், சுக்கிரனின் மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகளில் (Zodiac Signs) உங்களுடையதும் இருக்கிறதா என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.


மேஷ ராசிக்கு லஷ்மி நாராயண யோகம் 


லஷ்மி நாராயண யோகம், மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்களை அளிக்கும். பண வரவுக்கான புதிய வழிகள் திறக்கும். கடின உழைப்புடனும் நேர்மையுடனும் செய்யும் ஒவ்வொரு வேலையும் உங்களுக்கு வெற்றியைத் தரும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அனைத்து விதமான ஆதரவு கிடைக்கும், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.


சிம்ம ராசிக்காரர்களுக்கு லஷ்மி நாராயண யோகம் 


சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரத்தால் தொழிலில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும், . திடீர் பண வரவுகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். தொழில் ரீதியாக இந்த நேரம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். புதிய வேலை வாய்ப்பும் வரலாம். இந்த நேரத்தில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், நீங்கள் மகிழ்ச்சியை உணர்வீர்கள். 


மேலும் படிக்க | தனுசு ராசியில் புத-ஆதித்ய யோகம்... வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 5 ராசிகள்!


கன்னி ராசியினருக்கு லஷ்மி நாராயண யோகம் 


சொந்தமாக வியாபாரம் செய்யும் கன்னி ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் மிகவும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். தொழிலில் பெரிய முன்னேற்றங்கள் இருக்கும். நீங்கள் விரும்பிய நிலையை அடையலாம், வருமானம் பெருகும், பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும்.  


துலாம் ராசிக்கு லஷ்மி நாராயண யோகம் 


சுக்கிரன், தனுசு ராசியில் நுழையும் போது, ​​துலாம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் ஏற்படும். தொழில் வாழ்க்கை அல்லது காதல் வாழ்க்கை தொடர்பாக தற்போது எடுக்கும் முடிவுகளால் உங்கள் வாழ்க்கையின் போக்கே மாறும். தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு சாதகமான காலம் இது.  


கும்ப ராசிக்காரர்களுக்கு லஷ்மி நாராயண யோகம் 


சுக்கிரனின் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு அற்புதமான வாழ்க்கைக்கான அடித்தளம் அமையும். வசதிகள் பெருகும், நிலுவையில் உள்ள பணம் எதிர்பாராத நேரத்தில் வந்து மகிழ்ச்சியைத் தரும். இப்போது முதலீடு செய்யும் பணம், எதிர்காலத்தில் பல மடங்காக திரும்பக் கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்?


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ