இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை,,, சிலருக்கு சந்தோஷம்... சிலருக்கு சங்கடம்!

இன்றைய ராசிபலன்: அனைத்து ராசிகளும் தங்களுக்கான தினபலன்களை அறிந்து கொள்வது, அவர்களது நாளை திட்டமிட உதவும். இன்று என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய தொடர்ந்து ராசி பலனை படியுங்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 4, 2024, 07:21 AM IST
  • அனைத்து ராசிகளுக்கான தினபலன்கள்.
  • மனதில் புதுவிதமான மாற்றம் ஏற்படும்.
  • பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவை ஏற்படுத்தும்.
இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை,,, சிலருக்கு சந்தோஷம்... சிலருக்கு சங்கடம்! title=

இன்றைய ராசிபலன்: அனைத்து ராசிகளும் தங்களுக்கான தினபலன்களை அறிந்து கொள்வது, அவர்களது நாளை திட்டமிட உதவும். இன்று என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய தொடர்ந்து ராசி பலனை படியுங்கள்.

இன்றைய (04-01-2024) ராசி பலன்கள்

மேஷம்

நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். விலகிச்சென்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். வழக்குகளில் சில நுணுக்கங்களை புரிந்துகொள்வீர்கள். பயணங்களின் மூலம் ஆதாயமும், அலைச்சலும் ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோக முயற்சிகள் கைகூடும். 

ரிஷபம்

மனதில் புதுவிதமான மாற்றம் ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். திறமைக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கும்.  குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். 

மிதுனம்

பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவை ஏற்படுத்தும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு உண்டாகும். 

கடகம்

வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் கைகூடும்.வாகன பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். 

சிம்மம்

அனுபவம் மிக்கவர்களின் அறிமுகம் உண்டாகும். சுதந்திரமாக செயல்படுவீர்கள். அரசு சார்ந்த உதவி கிடைக்கும்.  உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எழுத்து துறைகளில் புதிய மாற்றம்  ஏற்படும். உத்தியோகப் பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். 

கன்னி

வாழ்க்கைத் துணைவர் பற்றிய சிந்தனை உண்டாகும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மகிழ்ச்சியான சிந்தனைகளின் மூலம் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய பயணங்கள் கைகூடும். இணைய வர்த்தக தொழிலில்  முன்னேற்றம் உண்டாகும். தயக்க உணர்வு இல்லாமல் செயல்படுவது நல்லது. சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். 

மேலும் படிக்க | குரு - சுக்கிரனின் ஷடாஷ்டக யோகம்! பாடாய் படப்போகும் ‘சில’ ராசிகள்!

துலாம்

செயல்பாடுகளில் சுதந்திர தன்மை மேம்படும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். சமூகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல் அதிகரிக்கும். 

விருச்சிகம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். 

தனுசு

இறை சார்ந்த நம்பிக்கை மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். கற்பித்தல் திறனில் மாற்றம் உண்டாகும்.தந்தை வழி உறவுகளின் மூலம் மேன்மை உண்டாகும். கால்நடை பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  கூட்டாளிகளால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். விலகிச் சென்றவர்கள் பற்றிய நினைவுகள் மேம்படும். 

மகரம்

வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். காப்பீடு சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அபிவிருத்திக்காண வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். 

கும்பம்

புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். கடந்த கால நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எந்த செயலிலும் உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சூரியனின் அருளால்... தை மாதத்தில் பட்டையை கிளப்பப்போகும் ‘3’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News