Neptune In Pisces: காதலையும் கற்பனையும் நனவாக்கும் கிரகப் பெயர்ச்சி! மீனத்துக்கு கொண்டாட்டம்
Neptune Planet Transit 2023: சுக்கிரன் வியாழன் மற்றும் நெப்டியூன் கிரகங்களின் முக்கூட்டு ராஜயோகம் சில ராசிகளுக்கு பலனளிக்கும்! இதில் திளைக்கப்போவது மீன ராசியினர்
இந்த மாதம் (பிப்ரவரி 2023) 18ம் நாளன்று நெப்டியூன் கிரகம் மீனத்தில் பெயர்ச்சியாகிறது. ஏற்கனவே சுக்கிரன் மற்றும் வியாழன் மீனத்தில் இருப்பதால், மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் இருப்பதால் ஏற்படும் ராஜயோகம் சில ராசிகளுக்கு பலனளிக்கும். ஜோதிடத்தின்படி, நெப்டியூன் கிரகம் "வருண கிரகம்" என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில், சாதனை, வெற்றி மற்றும் புகழ் ஆகியவற்றை தீர்மானிக்கும் கிரகம் என்று நெப்டியூன் கருதப்படுகிறது. சாதகமான நிலையில் நெப்டியூன் இருந்தால், வாழ்க்கையில் வெற்றி அடையலாம்.
பூமியிலிருந்து 2.8 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள நெப்டியூன், நமது சூரிய குடும்பத்தில் எட்டாவது மற்றும் மிக தொலைதூர கிரகமாகும். சூரியனில் இருந்து பூமியை விட 30 மடங்கு தொலைவில் உள்ள நெப்டியூன் மட்டுமே நமது சூரிய குடும்பத்தில் வெற்றுக் கண்ணுக்குத் தெரியாத ஒரே கிரகம் ஆகும்.
அதேபோல, அது நவகிரகங்களில் மறைவிடத்தில் இருந்தே பலன் கொடுக்கிறது. மேற்கத்திய ஜோதிடத்தில் நெப்டியூனுக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால், இராகு கேது ஆகிய நிழல் கிரகங்களுக்கு இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிடத்தில் நெப்டியூன் எதற்கு அதிபதி?
கற்பனை, மாயை மற்றும் மாயத்தோற்றத்திற்கு அதிபதியாக இருக்கும் கிரகம் நெப்டியூன். மாய மண்டலத்தை ஆளுகிறது. கடலின் கடவுளின் பெயரால் ‘வருண கிரகம்’ என பெயரிடப்பட்டது. புகைப்படம் எடுத்தல், திரைப்படம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நெப்டியூன் கிரகம், கனவுகள், அமானுஷ்ய சக்திகள் மற்றும் படைப்பு நோக்கங்களுக்கு அதிபதி ஆவார்.
மேலும், நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் "தனிப்பட்ட கிரகங்கள்" (சூரியன், சந்திரன், புதன், வீனஸ் மற்றும் செவ்வாய்) போலல்லாமல், நெப்டியூன் சூரியனில் இருந்து மிகவும் தொலைவில் உள்ள கிரகமாக இருப்பதால், இது நீண்ட கால அனுபவங்களை பாதிக்கிறது.
நெப்டியூன் ஒரு ராசி மண்டலத்தை ஒரு சுற்று சுற்றி வர 165 ஆண்டுகள் ஆகும், இதுவே சூரியன் 12 ராசிகளையும் ஒரு ஆண்டில் கடந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது எந்த ஒரு மனிதனும் நெப்டியூனின் முழு சுழற்சியை அனுபவிக்க முடியாது.
மேலும் படிக்க | 12 ஆண்டுக்குப் பிறகு சனி சுக்கிரன் சேர்க்கை, இந்த ராசிகளுக்கு புரமோசன் கிடைக்கும்
நெப்டியூன் ஒரு ராசியில் சுமார் 14 ஆண்டுகள் இருப்பதால், ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அதன் செல்வாக்கை அழுத்தமாக பதிய வைக்கிறது.
2011 ஆம் ஆண்டு முதல், நெப்டியூன் மீனத்தின் வழியாக நகர்கிறது, ராசி மண்டலத்தின் கடைசி ராசியினான மீனம், உள்ளுணர்வு, கலைத்திறன் மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடையது, இது நெப்டியூனின் சொந்த இயற்கையான தன்மையுடன் முழுமையாக இணைகிறது.
அடுத்ததாக, மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகும் நெப்டியூன், 2025 முதல் 2039 வரை வரை அங்கேயே சஞ்சரிக்கும். மேஷம் என்பது ஆர்வம், மனக்கிளர்ச்சி மற்றும் உறுதியுடன் தொடர்புடைய ராசியாக இருக்கும். எனவே, மீனத்திற்கு பிறகு மேஷ ராசிக்கு நெப்டியூனின் தாக்கம் அதிகம் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கும்பத்தில் இணையும் சனி - புதன்! மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ‘3’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ