12 ஆண்டுக்குப் பிறகு சனி சுக்கிரன் சேர்க்கை, இந்த ராசிகளுக்கு புரமோசன் கிடைக்கும்

Jupiter-Shukra Conjunction 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசியில் சுப, அசுப பலனை ஏற்படுத்தி தரும். அதன்படி மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை சில ராசிகளுக்கு வேலையில் புரமோசன் தரும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 21, 2023, 03:20 PM IST
  • பிப்ரவரி 15ஆம் தேதி மீன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியானார்.
  • குரு சுக்கிரன் சேர்க்கை.
  • வாழ்க்கையில் செழிப்பு ஏற்படும், வாழ்க்கை துணையுடன் அன்பு அதிகரிக்கும்.
12 ஆண்டுக்குப் பிறகு சனி சுக்கிரன் சேர்க்கை, இந்த ராசிகளுக்கு புரமோசன் கிடைக்கும் title=

குரு சுக்கிரன் சேர்க்கை 2023 பலன்: ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பயணிக்கின்றன. ஒரு கிரகம் தனது நிலையை மாற்றும் போதெல்லாம், அது சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதன்படி மீன ராசியில் ஏற்கனவே குரு பெயர்ச்சியடைந்துள்ளார், மேலும் பிப்ரவரி 15 அன்று சுக்கிரனும் மீன ராசிக்குள் பெயர்ச்சியடைந்தார். இதனால் குரு சுக்கிரன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இந்த சேர்க்கை அனைத்து 12 ராசிகளின் வாழ்விலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் 3 ராசிக்காரர்களுக்கு செல்வச் செழிப்பும், முன்னேற்றமும் உண்டாகும். இந்த 3 ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த கூட்டணி சிறப்பாக பலனைத் தரப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த நேரத்தில் நீங்கள் பண பலன்களைப் பெறுவீர்கள். அதோடு குழந்தைகளின் மகிழ்ச்சியும் கூடும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த புதிய வேலையையும் தொடங்கலாம்.

மேலும் படிக்க | 700 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் பஞ்ச மஹா யோகம்! ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம்!

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நல்ல பலனளிக்கும். உங்கள் ராசியின் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் இந்த சேர்க்கை அமையப் போகிறது. இதனால் இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சுப பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதாரம் மற்றும் வணிக விஷயங்களிலும் அதிர்ஷ்டம் கடுமையாக ஓங்கும். அதே நேரத்தில், நீங்கள் வேலை மற்றும் வணிகம் தொடர்பான பயணங்களையும் மேற்கொள்வீர்கள். இத்துடன் தடைபட்ட வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.

மீனம் 
ஜோதிட சாஸ்திரத்தின்படி, குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு நன்மை பயக்கும். இந்த நேரத்தில் உங்கள் வசதிகள் அதிகரிக்கும். மரியாதை கூடும். வெளிநாட்டில் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பணம் கிடைக்கும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். அதே சமயம் வியாபாரம் செய்பவர்களும் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News