ராகு கேது பெயர்ச்சி 2023: இந்த '4' ராசிகளின் வாழ்க்கையில் புயல் வீசலாம்!

2023 ஆம் ஆண்டில், சனியைத் தவிர, ராகு-கேது போன்ற மிக முக்கியமான கிரகங்களும் மாறப் போகின்றன. ராகு சஞ்சாரம் மற்றும் கேது சஞ்சாரம் 12 ராசிகளையும் பாதிக்கும் என்றாலும் 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பல மாற்றங்களை உருவாக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 8, 2022, 12:28 PM IST
  • கன்னாபின்னாவென்று அதிகரிக்கும் செலவுகள் பட்ஜெட்டை கெடுத்துவிடும்.
  • பதவி உயர்வு - சம்பள உயர்வு பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
  • வியாபாரிகளும் சவால்களை சந்திக்க வேண்டி வரும்.
ராகு கேது பெயர்ச்சி 2023: இந்த '4' ராசிகளின் வாழ்க்கையில் புயல் வீசலாம்! title=

ஜோதிடத்தில், சனி ஒரு கர்ம பலன்களை கொடுக்கும் கிரகமாக கருதப்படுகிறது, அதே நேரத்தில் ராகு மற்றும் கேது பாவ கிரகங்களாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு கிரகங்களும் எப்பொழுதும் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகின்றன. ஜாதகத்தில் ராகு கேது நிலை அசுபமாக இருந்தால், அந்த நபர் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். ஒன்றரை வருடத்தில் ராசியை மாற்றும் நிழல் கிரகங்கள் என அழைப்படும் ராகு-கேது, 2023ல்  பெயர்ச்சி ஆகின்றன போகின்றன. 2022 ஆம் ஆண்டிலும் ராகுவும் கேதுவும் தங்கள் ராசியை மாற்றிக் கொண்டன. இப்போது இதற்குப் பிறகு ராகு-கேது 2023 ஆம் ஆண்டிலும் பெயர்ச்சி ஆகிறது. ஆனால் 2024 ஆம் ஆண்டில் ராகு-கேது பெயர்ச்சி இருக்காது. எனவே, 2023 ஆம் ஆண்டு ஜோதிடத்தைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானதாக இருக்கப் போகிறது. ராகு-கேது பெயர்ச்சி அக்டோபர் 30, 2023 அன்று நடக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ராகு-கேதுவின் மாற்றம் பாதகமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்த ராசிக்காரர்கள் 2023 ராகு-கேதுவின் பெயர்ச்சியினால் வாழ்க்கையில் புயலை சந்திக்க நேரிடும்

மேஷம்:

2023-ம் ஆண்டு ராகு-கேதுவின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை கொடுக்கும் என சொல்ல முடியாது. ராகு-கேது பொருளாதார நிலையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத ஓட்டம் உங்களை சோர்வடையச் செய்யும். திருமண வாழ்க்கையும் மோசமாக பாதிக்கப்படலாம். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ராகு-கேதுவின் சஞ்சாரம் சாதகமாக இருக்காது. கன்னாபின்னாவென்று அதிகரிக்கும் செலவுகள் உங்கள் பட்ஜெட்டை கெடுத்துவிடும். எனவே பட்ஜெட்டை மனதில் வைத்து செலவு செய்யுங்கள். நீண்ட தூரம் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படலாம். எனவே சேமிப்பின் மீது இப்போதே கவனம் செலுத்தவும். ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். 

கன்னி:

2023-ம் ஆண்டு கன்னி ராசியில் கேது இருப்பார். இதனால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் உறவுகள் மோசமடையலாம். பதவி உயர்வு - சம்பள உயர்வு பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளும் சவால்களை சந்திக்க வேண்டி வரும். தொழில் செய்பவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

மேலும் படிக்க | Astro: இந்த ‘ராசி’ ஜோடிகள் 'MADE FOR EACH OTHER' தம்பதிகளாக இருப்பார்கள்!

மீனம்:

2023ல் ராகு பெயர்ச்சியாகி மீன ராசியில் பிரவேசிக்கிறார். வணிகத்தின் அடிப்படையில் இதை நல்ல நிலை என்று சொல்ல முடியாது. செலவுகள் அதிகரிக்கும். கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். வருமானம் குறைபாடு இருக்கும். கவனக் குறைவு அதிகம் இருக்கும். முடிவெடுக்கும் போது உறவினர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

மேலும் படிக்க | டிசம்பரில் 3 முறை நிலை மாறும் புதன்... பண மழையில் நனையப் போகும் ‘3’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News