மேஷத்தில் வக்ரபெயர்ச்சியடையும் குரு.. இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி, குதுகலம்
Guru Vakra Peyarchi Palangal 2023: செப்டம்பர் மாதத்தில், குரு வக்ர பெயர்ச்சி அடையப் போகிறது. ஜோதிடத்தில், குரு மகிழ்ச்சி-செழிப்பு, செல்வம், பெருமை, திருமணம் மற்றும் ஆன்மீகத்தின் காரணியாகக் கருதப்படுகிறது.
குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் 2023: பொன்னவன் ஆங்கீரசன் ஜீவன் என வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் தனகாரகன் புத்திரகாரகன் என வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. வேத ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் அவ்வப்போது பெயர்ச்சி அடைந்து சுப மற்றும் அசுப யோகத்தை உருவாக்குகின்றன, அதன் விளைவு மனித வாழ்க்கையிலும் நாடு மற்றும் உலகிலும் காணப்படுகிறது. அந்த வகையில் சுப கிரகமாக கருதப்படும் குருபகவான், மேஷ ராசியில் செப்டம்பர் மாதம் முதல் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகிறார். எனவே வரும் டிசம்பர் மாதம் வரைக்கும் குரு பகவானின் வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று பார்க்கலாம்.
இந்த ராசிக்காரர்கள் குரு வக்ர பெயர்ச்சி அற்புதமாக இருக்கும்
மிதுனம்: குருவின் இந்த வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு லாபத்தை தரும். பண நெருக்கடி வந்து நீங்கும். வருமான வீட்டில் வியாழன் நிலை கொண்டிருப்பதால் இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்கும். இதனால் பெரும் லாபத்தைப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதரர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். வீடு, மனை வாங்கலாம்.
மேலும் படிக்க | ஆகஸ்ட் மாத கிரக பெயர்ச்சிகள்... ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் பண மழை தான்!
கடகம்: குரு பகவான் பத்தாம் வீட்டில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவு அதிகமாக இருக்கும். கடன்களை திருப்பி கொடுப்பீர்கள். தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவேறும். கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்: சிம்மம் ராசிக்காரர்களுக்கு புது வேலை கிடைக்கும். உயர்கல்வி படிப்பதில் இருந்த தடைகள் நீங்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். மண அமைதி தரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களின் மன குழப்பங்கள் நீங்கும். சுப காரியங்கள் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் எதை தொட்டதெல்லாம் பொன்னாக மாறும். உங்களின் அழகும் ஆரோக்கியமும் கூடும். பழைய கடன்களை அடைப்பீர்கள். சமூகத்தில் சொல்வாக்கும் உயரும். சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். இந்த நேரத்தில் தடைப்பட்ட சுப காரியங்களை வெற்றிகரமாக நடத்துவீர்கள். உங்களின் நட்பு வட்டம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு அதிகாரமுள்ள பதவிகள் தேடி வரும். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பீர்கள். செப்டம்பர் மாதத்திற்கு மேல் உங்களின் புத்திசாலித்தனம் அதிகமாகும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். மனைவி வழி உறவினர்களின் ஆதரவும் மனைவி வழியில் சொத்துக்களும் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சனியால் ஷஷ ராஜயோகம்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், பண மழை கொட்டும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ