குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்கள்.. பதவி உயர்வு, பண வரவு!!

Guru Vakra Peyarchi: குரு வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இது சில ராசிகளுக்கு நற்பலன்களையும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளையும் கொண்டு வரும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 22, 2023, 09:01 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு, தேவகுரு வியாழனின் வக்ர பெயர்ச்சி சுப பலன்களைத் தரும்.
  • உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
  • வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்கள்.. பதவி உயர்வு, பண வரவு!! title=

குரு வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவானுக்கு மிக முக்கியமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. குரு பகவான் வியாழன் என்றும் அழைக்கப்படுகிறது. குரு மகிழ்ச்சி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் கிரகமாக கருதப்படுகிறார். ஒருவருடைய ஜாதகத்தில் வியாழன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அதன் மூலம் அவர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கத் துவங்கும். ஜாதகத்தில் வியாழன் சுபமாக இருந்தால், அந்த நபர் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்துகிறார்.

குரு வக்ர நிலை

12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் நுழைவார். செப்டம்பர் 4, 2023 முதல், குருவின் வக்ர பெயர்ச்சி துவங்கும். மீனத்தில் குருவின் வக்ர பெயர்ச்சி மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. 

குரு வக்ர பெயர்ச்சி: ராசிகளில் அதன் தாக்கம்

குரு வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இது சில ராசிகளுக்கு நற்பலன்களையும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளையும் கொண்டு வரும். எனினும், குருவின் வக்ர பெயர்ச்சி குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்களை அள்ளித்தர உள்ளது. இது இவர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. குருவின் வக்ர பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேஷ ராசி

செப்டம்பர் மாதம் முதல் குரு வக்ர பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் அனைத்து வேலைகளிலும் சுப பலன்களைப் பெறுவார்கள். சிக்கியிருந்த பணம் திரும்பக்கிடைக்கும். உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் படிக்க | சதயத்தில் இணையும் சனி ராகு! அக்டோபர் முதல் ‘இந்த’ ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கும்!

மிதுன ராசி

குரு பகவானின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரப்போகிறது. இவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். விரும்பிய பதவியும் பணமும் கிடைத்து மகிழ்ச்சி அடைவார்கள். தொழில் மற்றும் நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் எதிர்பாராத பலன்களைப் பெறலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். புகழ் அதிகரிக்கும் இந்த காலத்தில் பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான நற்பலன்கள் கிடைக்கும். 

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு, தேவகுரு வியாழனின் வக்ர பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதால், உங்களின் பொருளாதார கவலைகள் நீங்கும். பண வரவு நன்றாக இருக்கும். மன அமைதியும் மகிழ்ச்சியும் அடைவீர்கள். குடும்ப வாழ்க்கையில் இருந்த சிரமங்கள் நீங்கும். குருவின் வக்ர பெயர்ச்சி வேலையில்லாதவர்களுக்கு மிகவும் சாதகமான காலமாக இருக்கும். இப்போது நல்ல வேலை கிடைக்கலாம். தந்தையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும்.

குரு அரருள்

தேவ குரு வியாழன் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். பல வித நல்ல பலன்களை அளிக்கும் சுப கிரகமாக அவர் பார்க்கப்படுகிறார். மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம், திருமணம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் காரணியாக குரு கருதப்படுகிறார். ஒருவர் மீது குரு பார்வை பட்டால் அவர் வாழ்வில் அனைத்து வித சந்தோஷங்களையும் பெறுகிறார். தற்போது வியாழன் மேஷ ராசியில் அமர்ந்துள்ளார். அவர் செப்டம்பர் மாதம் வக்ர பெயர்ச்சி அடைவார்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அமாவாசை அன்று காகங்களுக்கு உணவளித்தால் இவ்வளவு நன்மைகளா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News