அருள் பாலிக்கும் கடவுளை பணக்காரராக்கும் பக்தர்கள்! இந்தியாவின் பணக்கார கோவில்கள்!
Richest Temples Of India : ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் கடவுளுக்கு சமர்ப்பிக்கும் காணிக்கைகளும், கொடுக்கும் நன்கொடைகளும் மிக அதிகமானவை... அருள் பாலிக்கும் கடவுளை பணக்காரராக்கும் பக்தர்கள்!
ஆன்மீகத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவில் இந்து மதத்தினரின் பக்தியும் வழிபாடும் உலக பிரசித்தி பெற்றது. உலகின் பல்வேறு மதங்களில் வெவ்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் இருந்தாலும், அமைப்பின் நிர்வாகம், வழிபாடு என மதங்களுக்கு ஏற்ப அடிப்படை கட்டமைப்பு மாறுபடும்.
இந்து மதத்தில் கடவுள்களுக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டுவதும், அதை பராமரிப்பதும் மிகவும் பிரசித்தி பெற்றது என்றால், ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் கடவுளுக்கு சமர்ப்பிக்கும் காணிக்கைகளும், கொடுக்கும் நன்கொடைகளும் மிக அதிகமானவை ஆகும்.
அதிலும் உலக புகழ்பெற்ற இந்திய கோவில்களுக்கும், தெய்வங்களுக்கும் சர்வதேசங்களிலும் ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் போடும் காணிக்கை தெய்வ காரியங்களுக்கும், கோவில் நிர்வாகச் செலவுகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.
பொருளுக்கு முக்கியத்துவம் தரும் இன்றைய உலகில், எந்த கடவுளின் கோவிலுக்கு அதிக காணிக்கை வருகிறது என்பதும் எப்போதும் பேசுபொருள் தான். அந்த வகையில் அதிக காணிக்கை அல்லது வருமானம் ஈட்டும் இந்துக் கோவில்கள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
பூரி ஜெகந்நாதர் ஆலயம்
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலின் கருவூலம் 46 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த ரத்தினக் கற்களின் மதிப்பும் தொன்மையும் அவதானிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஜெகநாதர் கோயில் போல பிரசித்தி பெற்ற பல கோயில்கள் உள்ளன. அவற்றில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடி மதிப்புள்ள காணிக்கைகளும் நன்கொடைகளும் வந்து குவின்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் பணக்கார கோவில்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | வாஸ்து தோஷங்கள் நீங்க... விக்னங்களை நீக்கும் விநாயகர் சிலை ஒன்றே போதும்..!
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்
பத்மநாபசுவாமி கோயிலும் உலகின் பணக்காரக் கோயில்களில் ஒன்று. இந்தக் கோவிலுக்கு 1,20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கின்றன. கோவிலின் பொக்கிஷத்தில் தங்கம், மரகதம், பழங்கால ஆபரணங்கள், வெள்ளி, வைரங்கள் உட்பட விலை மதிப்புள்ள ரத்தின கற்கள் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு இங்கு மறைந்திருந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டதால், பத்மநாப சுவாமி ஆலயத்தின் சொத்து மதிப்பு மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில்
திருப்பதி திருமலையில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரப் பெருமாள் கோயில் உலகின் பணக்கார கோயில்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலின் சொத்து மதிப்பு ரூ.3 லட்சம் கோடி. ஒவ்வொரு நாளும் சுமார் 50,000 பக்தர்கள் கோயிலுக்கு வருகிறார்கள் என்றும், நன்கொடைகள், மதிப்புமிக்க பொருட்கள் என ஆண்டு வருமானம் 1400 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | வீட்டில் மயிலிறகு வைக்கலாம்... ஆனால்... வாஸ்து நிபுணர்கள் கூறுவது என்ன..!!
குருவாயூர் கோவில்
கேரளாவில் அமைந்துள்ள குருவாயூர் தேவஸ்வம் பழமையான கோவில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ரூ.1,737.04 கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது 271.05 ஏக்கர் நிலம் உள்ளிட்ட பல சொத்துக்கள் கோயிலிடம் உள்ளன. தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த கற்கள் என குருவாயூர் கிருஷ்ணனின் சொத்து மதிப்பு ஏராளம்.
மகாராஷ்டிரா ஷீரடி சாய்பாபா கோவில்
மகாராஷ்டிராவில் உள்ள கோவில்களில் மிகவும் பிரபலமான ஷீரடி சாய்பாபாவின் கோவிலுக்கு தினமும் சுமார் 25,000 பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். 1922ல் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு, 2022ல் 400 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்தது. இரண்டு மருத்துவமனைகளை நிர்வகித்து வரும் சீரடி சாய்பாபா கோவிலில் தினசரி ஆயிரக்கணக்கான மக்களுக்கு இலவச உணவு அன்னதானமாக வழங்கப்படுகிறது.
வைஷ்ணோ தேவி கோவில், ஜம்மு
ஜம்முவில் உள்ள கத்ராவில் கடல் மட்டத்திலிருந்து 5200 அடி உயரத்தில் அமைந்துள்ள அன்னை துர்க்கையின் வைஷ்ணவி தேவி கோவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்தியாவில் உள்ள பணக்கார கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த கோவிலில் 2000 முதல் 2020 வரை 1800 கிலோ தங்கம், 4700 கிலோ வெள்ளி, 2000 கோடி ரூபாய் ரொக்கக் காணிக்கையாக வந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ