காலே போனாலும் கடமையாற்றும் சனீஸ்வரர்! இராவணனுக்கு செக் வைத்த மாந்தியின் அப்பா!

Family Of Saneeswaran Interesting Real Story : நவகிரகங்களை சிறை பிடித்த அரசனுக்கு செக் வைத்த சனீஸ்வரர்! கடமை கண்ணியம் கட்டுப்பாட்டிற்காக காலையே பறி கொடுத்த சனியின் கதை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 14, 2024, 11:19 AM IST
  • சனீஸ்வரரின் குடும்பம்
  • மாந்தி குளிகன் சகோதரர்களின் தந்தை
  • சனீஸ்வரரின் கால் ஊனமான கதை
காலே போனாலும் கடமையாற்றும் சனீஸ்வரர்! இராவணனுக்கு செக் வைத்த மாந்தியின் அப்பா! title=

சனீஸ்வரர் என்றாலே பலருக்கும் பயமும் பீதியும் வருகிறது. ஆனால் அவரும் பிள்ளை குட்டிகளுடன் வசிக்கும் குடும்பஸ்தன் தான், அவருக்கும் கருணை இரக்கம் அனைத்துமே உண்டு. நமது நன்மை தீமைகளுக்கேற்ற பலனை வழங்கும் கடமையை சீராக நிறைவேற்றும் நீதி வழுவாத நீதிபதி என்பதால் தான் அனைவருக்கும் சனீஸ்வரர் என்றாலே தனி மரியாதை வருகிறது. அதேபோல, நவகிரகங்களிலும் பிற கிரகங்களுக்கு எல்லாம் இல்லாத பட்டமாக, ‘ஈஸ்வரர்’ என்ற அடைமொழியையும் பெற்றிருக்கிறார் சனீஸ்வர பகவான்.

நமது கர்மாக்களுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பதில் தவறாமல் கடமை ஆற்றும் தொழிலுக்கு அதிபதி, உடல் உழைப்பை கொடுத்து ஆரோக்கியத்தை காப்பாற்றும் நண்பர் என்றும் சொல்லலாம். இவை அனைத்தும் ஒரு பக்கம் இருந்தாலும், சனீஸ்வரருக்கு இரக்கம் இல்லை என்றும், அவர் மிகவும் கொடூரமானவர் என்றும் நினைப்பதும் உண்டு. ஆனால் அது உண்மையல்ல. அவரும் பிள்ளை குட்டிகள் கொண்ட குடும்பஸ்தன் தான்

சனீஸ்வரரின் குடும்பம்
மந்தாதேவி, ஜேஷ்டாதேவி என்ற இரு மனைவிகளும் மாந்தன், குளிகன் என இரு மகன்களும் உண்டு. எனவே அவர் இரு பிள்ளைகளுக்கு பொறுப்பான அப்பாவும் கூட என்பது அனைவருக்கும் அறியாதது. சனீஸ்வரர் - ஜ்யேஷ்டா தம்பதிகளின் மகன் பெயர் குளிகன்.  சனீஸ்வரரின் மற்றொரு மனைவி மாந்தா, இவருக்கு தாமினி என்றும் பெயர் உண்டு. மாந்தாவிற்கும் சனிக்கும் பிறந்த மகனின் பெயர் மாந்தி. 

சனீஸ்வரரின் மகன்கள்

மூத்த மகன் குளிகன் எருமைத்தலையும் மனிதஉடலும் கொண்டவராக இருப்பார். மாந்தியைசனி பகவானின் துணைக்கிரகம் என்றும் சொல்வதுண்டு.  மாந்தியின் பிறப்பு மிகவும் சுவாரசியமானது. இந்த கதை சனீஸ்வரரின் கடமை உணர்ச்சியை உலகுக்கு எடுத்து சொல்வதாக உள்ளது.

மேலும் படிக்க | இஷ்டப்பட்டு கஷ்டப்பட வைக்கும் ராகு! கஷ்டத்தை கொடுத்து வாழ்க்கையை உணர்த்தும் நிழல் கிரகம்!

மாந்தி பிறந்த கதை
தனது மனைவி மண்டோதரி கருவுற்றிருந்தபோது, தனக்கு பிறக்கும் மகன் தோல்வி என்பதையே சந்திக்காத வெற்றியாளனாக இருக்க வேண்டும் என்று இலங்கேஸ்வரர் இராவணன் விரும்புகிறார். அதற்காக தனது குரு சுக்ராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்கிறார்.  அசுர குரு சுக்ராச்சாரியார் இதற்கு சொன்ன ஆலோசனை என்ன தெரியுமா? ஜாதகத்தின் பதினொன்றாம் கட்டத்தில் அனைத்து கிரகங்களும் இருந்தால், பிறக்கும் குழந்தை வெற்றியாளனாக இருப்பான் என்று சொன்ன குரு, ஆனால் கிரகங்கள் 12-ஆம் இடத்திற்கு சென்றுவிட்டால் பிறக்கும் குழந்தை அசுப பலன்களுடன் இருக்கும் என்றும் சொல்கிறார்.

நவகிரகங்களை சிறை வைத்த ராவணன்
தனது மகன் சகல வல்லமையுள்ளவனாக பிறக்க வேண்டும் என்பதற்காக, இராவணன் தனது தவவலிமையை பயன்படுத்தி சிறை வைக்கிறார், அதுவும் நிலத்தில் இருப்பதைவிட, நீரில் இருந்தால், நவகிரகங்களின் பலம் குறைந்துபோகும் என்று நீருக்குள் சிறை வைக்கிறார். 

நவகிரகங்கள் தங்கள் கடமையை செய்யாவிட்டால் என்ன ஆகும்? சிவனிடம் முறையிட்டு பிரார்த்தித்த நவகிரகங்களுக்கு, சுக்ராச்சாரியாரே அவர்களது கடமையை ஆற்ற வழியையும் சொல்லிக்கொடுக்கிறார். ஒன்பது கிரகங்களுக்கும் சமமான பலத்துடன் கூடிய ஒருவரை படைத்துவிட்டால், அனைவரும் விடுதலை அடையலாம் என்ற சுக்ராச்சாரியரின் ஆலோசனையை நவகிரகங்கள் ஏற்றுக் கொண்டனர்.  

இப்படி ஆலோசனைகளை செயல்படுத்த ஆயத்தமாகி வரும் நிலையில், கடமை தவறாத சனீஸ்வரர் 11ம் இடத்தில் இருந்து , 12-ஆம் இடம் நோக்கி நகர்கிறான், நகர்ந்து செல்லும் நவகிரமான சனி பகவானின் காலை இராவணன் துண்டித்துவிடுகிறான். இராவணன் காலை முடமாக்கினாலும் தனது கடமையை செய்துவிட வேண்டும் என்பதற்காக, சனி,  சிறையில் இருந்தவாறே தனது மனைவியான மாந்தாவை கர்ப்பமுறச் செய்துவிட்டார். மாந்தாவின் கர்ப்பம் மாந்தி என்ற குழந்தையாக பிறந்துவிட்டது. ஆனால், இராவணனுக்கு நவகிரகங்களைத் தவிர இன்னொரு கிரகம் இருக்கும் தகவலே தெரியாது. 

மேலும் படிக்க | ராணுவ வீரர்களின் ஜாதகத்தில் செவ்வாய் எங்கே இருப்பார்? வீரத்தை தரும் அங்காரகர்!

சனீஸ்வரர், தனது கடமையை ஆற்ற மகனை பயன்படுத்திக் கொள்கிறார். 12-ஆம் இடத்திற்கு மாந்தி நுழைந்ததும், இராவணனுக்கும் மகன் பிறக்கிறான். 11ம் கட்டத்தில் நவகிரகங்கள் அனைத்தும் இருக்கும் நிலையில் மகன் பிறந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் இராவணன் நவகிரகங்களை விடுதலை செய்துவிட்டார். கடமையும் சரியாய் நடந்ததுடன் மாந்தியின் காரணமாக தாங்கள் விடுவிக்கப்பட்டதால், நவகிரகங்களுக்கும் மாந்தியின் மீது தனி அன்பு உண்டு. அதேபோல, இராவணனால் கால் வெட்டுப்பட்டு ஊனமான சனிபகவானின் ஊனத்தை காகம் பெற்றுக் கொண்டதாம். இதனால் தான் சனிபகவான் காகத்தை தன் வாகனமாக வைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

தன் மகன் வெற்றியை மட்டுமே ருசிக்க வேண்டும் என்று விரும்பிய இராவணன், தனது மகனுக்கு மேகநாதன் என்று பெயர் வைத்தாலும், இந்திரஜித் என்று பிரபலமாகிறார். இறுதியில், 12-ஆம் இடத்தில் அமர்ந்த மாந்தி, இராவணனின் ஆசையை விதிவசத்தால் முடிவுக்கு கொண்டு வரும் வகையில்  அற்ப ஆயுளைக் கொடுத்தார். 

சனியின் மகனான மாந்திக்கு சனியின் துணை கிரகம் என்ற பெயரும் உண்டு. இப்படி தனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் காலே போனாலும் கடமை ஆற்றுவதில் குறியாக இருக்கும் சனீஸ்வரர், தவறு செய்தவர்களுக்கு மட்டும் தான் தண்டனை கொடுப்பார். 

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனி பாடாய் படுத்துகிறதா... சனியின் அருளை பெற உதவும் நீலக்கல்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News